Share via:
ஊபர் நிறுவனம் இந்தியாவில் வாடகை கார் சேவையை தொடங்கி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் ஓட்டுநர்களுடைய 1,000 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாகக் கொண்டு ஊபர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 70 நாடுகளில் 11 ஆயிரம் நகரங்களில் வாடகைக் கார் சேவையை செய்து வரும் ஊபர் இந்தியாவில் தனது சேவையை தொடங்கி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
அதனை கொண்டாடும் வகையிலும், ஓட்டுநர்களை மகிழ்விக்கும் வகையிலும் அவர்களின் 1,000 குழந்தைகளின் ஆரம்ப கல்வியில் இருந்து முதுநிலை கல்வி வரை ஆகும் செலவை ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் பள்ளிக்கட்டணம், உபகரணங்கள், இணையசேவை என அனைத்து செலவுகளும் அடங்கும்.
இது குறித்து ஊபர் இந்தியா நிறுவனத் தலைவர் பிரப்ஜீத்சிங் கூறும்போது, ‘‘ஓட்டுநர்களின் பங்களிப்பு இல்லாமல் எங்களால் 10 ஆண்டுகளாக இந்தியாவில் நிலைத்திருக்க முடியாது. எங்களின் சாதனைகளை நினைத்து பார்ப்பதுடன் எங்களுடன் இணைந்திருப்பவர்களுக்கு அதனை திருப்பிக் கொடுக்க கடமைப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தார்
மேலும், ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்கான வாய்ப்பு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அதோடு இந்த சிறு முயற்சி மூலமாக அனைத்து குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதற்கான பங்களிப்பு உறுதி செய்யப்படும் என்று உறுதியாக தெரிவித்தார்.
ஊபர் இந்தியா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அதன் பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.