Share via:
மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், கெஜ்ரிவாலின்
வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்று
கைது செய்தனர்.
இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்
பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறையை ஏவி கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளதாக ஆம்
ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கையை தொடர்ந்து
பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளது.
தேர்தல் பத்திர முறைகேடுகள் சர்ச்சையை மடைமாற்றவே கெஜ்ரிவால் கைது
செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து
சிறையில் வைக்க பயன்படுத்தப்பட்ட, Prevention of Money Laundry Act வழியேதான் கெஜ்ரிவாலும்
கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் 2ஜி தீர்ப்பு வழங்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு
சி.பி.ஐ. மேல் முறையீடு செய்யப்பட்டு, அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவும் செய்திருக்கிறது.
வெறுமனே விசாரணை மட்டுமே நடைபெறும் என்றாலும் வேறு ஏதேனும் காரணம் சொல்லி ஆ.ராசா, கனிமொழியை
கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தி.மு.க.வினர் நினைக்கிறார்கள். இதையே துரைமுருகன்
சமீபத்தில் கூறியிருந்தார்.
பா.ஜ.க.வின் தேர்தல் சூதாட்டம் சூடு பிடித்திருக்கிறது, இதனை நீதிமன்றம்
தடுத்து நிறுத்துமா என்று பார்க்கலாம்.