Share via:
நடிகர் விஜய் கட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இணைய இருப்பதாகவும்,
அவருக்கு முக்கியமான பதவி கொடுப்பதாகவும் அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால், திடீரென
ஓய்வு பெற்ற முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரி அருண்ராஜ் இணைந்துள்ளார். அப்படியென்றால் சகாயத்துக்கு
என்னாச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு அருண்ராஜ் பா.ஜ.க.வின் கையாள் என்ற பேச்சும்
பரபரப்பாகியிருக்கிறது.
நேற்ரைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலரும்
விஜய் முன்னிலையில் இணைந்தார்கள். இவர்களில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்
ராஜலட்சுமி, திமுகவிலிருந்து திருவைகுண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் ஆகியோர்
முக்கியமான நபர்கள். ஜேப்பியார் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மரியவில்சன் மற்றும் ஓய்வு
பெற்ற நீதிபதி சுபாஷ் ஆகியோரும் இணைந்தார்கள்.
ஆனால், எல்லோரும் எதிர்பார்த்த சகாயத்துக்குப் பதிலாக அருண்ராஜ்
ஐஆஎஸ் இணைந்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’எனக்கு எந்தக் கட்சியில்
இணைய வேண்டும் என்கிற சாய்ஸே இல்லை. ஏனெனில், எல்லா கட்சிகளையும் இத்தனை ஆண்டுகளாக
பார்த்துவிட்டோம். முதலில் நான் ஒரு சாமானிய மனிதன். சாமானிய மனிதர்கள் மாற்றம் வேண்டும்
என்றே நினைக்கிறார்கள். சமூகத்துக்கு எதாவது செய்ய வேண்டும் என்றுதான் சிவில் சர்வீஸூக்கு
வந்தேன். நன்றாக பணி செய்தேன் என்கிற திருப்தி இருக்கிறது. இதற்கு மேலும் எதாவது செய்ய
வேண்டும் என்பதற்காகத்தான் பொது வாழ்வுக்கு வந்திருக்கிறேன். ஜனநாயக நாட்டில் மக்களிடம்தான்
உண்மையான அதிகாரம் இருக்கிறது. தவெகவில் மட்டும்தான் கொள்கைப்பிடிப்பு இருக்கிறது.
வேறு யாரிடமும் இல்லை. விஜய் வீட்டுக்கு வருமானவரித்துறை ரெய்டு வந்த சம்பவத்தில் நான்
சம்பந்தப்பட்டிருந்தேன் என்பதில் உண்மையில்லை.’ என்று விளக்கம் கொடுத்தார்.
இந்த நிலையில், அருண்ராஜ் ஐ.ஏ.எஸ்.க்கு கொள்கை பரப்புச் செயலாளர்
பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஆனந்த் அவர்களுடைய வழிகாட்டுதலில் செயல்படுவார்
என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சகாயம் ஏன் சேரவில்லை என கட்சி நிர்வாகிகளிடம்
பேசினோம்.
‘’சகாயம் அவர்கள் கட்சியில் சேர்வதற்கு ஆர்வமாகவே இருக்கிறார்.
ஆனால், அவர் பொதுச்செயலாளர் பதவி கேட்டார். அதனை கொடுப்பதற்கு விஜய் தயாராக இல்லை.
தனக்கு நிகராக யாரும் கட்சியில் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். பா.ஜ.க.வின்
அசைன்மென்ட் மூலம் அருண்ராஜ் வந்திருப்பதாகச் சொல்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.’’
என்கிறார்கள்.