Share via:
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருக்கோவில்கள் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு மற்றும் இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருக்கோயில்கள் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகில் நடைபெற்ற இவ்விழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உரை நிகழ்த்தினார்.