Share via:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில் நடத்தப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 6ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பில் நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மிக்ஜாம் புயலால் தள்ளிவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கான அழைப்பிதழ்கள் முன்னதாகவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அழைப்பிதழ்கள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (ஜன.4) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து பொன்னாடை போர்த்தி அழைப்பு விடுத்தனர். இந்த சந்திப்பின் போது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளிராமசாமி, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பூச்சி முருகன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் கதிரேசன், திரைப்பட இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.