Share via:
வருகிற அக்டோபர் மாதம் 5ம் தேதி 90 தொகுதிகளைக் கொண்ட அரியானாவில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 8ம் தேதி நடைபெற உள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
2 முறை ஆட்சியை கைப்பற்றியுள்ள பா.ஜ.க. இம்முறை வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் அதிரடி திட்டங்களை தீட்டியுள்ளது. அதன்படி ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துடன் தாயகம் திரும்பிய வினேஷ் போகத்தை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
100 கிராம் எடை அதிகமானதால் வெள்ளி மற்றும் தங்கப்பதக்கத்தை கைநழுவ விட்ட வினேஷ் போகத்துக்கு முழு இந்தியாவுமே உறுதுணையாக உள்ளது. அவரை கவுரவிக்கும் வகையிலும், அவருக்கான புகழை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் இந்த யுக்தியை கையில் எடுத்துள்ளார் ராகுல்காந்தி என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.