Share via:
மலையாள சொந்தங்கள்
அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துக்கள் என்று தமிழிலும் மலையாளத்தில்
விஜய் போட்ட ஒரு வரி ட்வீட், அவரது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அலற விட்டுள்ளது. விஜய்க்கு
எதிராக கம்பு சுத்தும் எதிர்க் கட்சியினரை சமாளிக்க முடியாமல் அவரது ரசிகர்கள் தலைகுனிந்து
நிற்கிறார்கள்.
‘’நீங்க தமிழகத்தில்
கட்சி ஆரம்பிச்சுட்டு கேரளாவில் போய் தேர்தலில் நிற்கப் போறீங்களா..?’’ என்று நாகரிகமாக
ஆரம்பித்து, ‘’வெக்கமா இல்லையா விஜய் உங்களுக்கு. தமிழ்மக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு
வாழ்த்து சொல்ல வக்கில்லை, இதுல மலையாள டுவீட் வேற. சத்தியமா நீங்கல்லாம் ஒரு இடத்தில
கூட ஜெயிக்க மாட்டீங்க. சீக்கிரம் அரசியல்ல இருந்து காணாம போக போறீங்க, நாங்க பக்க
தான் போறோம்’’ என்று வெளுக்கிறார்கள்.
கட்சி ஆரம்பித்தத்தில்
இருந்து தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்துக்கள் சிறப்பாகக் கொண்டாடும்
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. இப்படி இந்துக்களின் பண்டிகைகளுக்கு
வாழ்த்து சொல்லாத விஜய், மற்ற மதத்தினர் மற்றும் மற்ற மாநில மக்களின் பண்டிகைகளுக்கு
மட்டும் வாழ்த்து சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம். திராவிடக் கட்சியைப் போலவே மதம்
பார்த்து வாழ்த்து சொல்றீங்களே… நீங்க நல்லவே இருக்க மாட்டீங்க’’ என்று திட்டித் தீர்க்கிறார்கள்.
’’முதல் மாநாடு நடத்த
முடியுமான்னு விழிச்சிக்கிட்டு இருக்கும்போது அடுத்த பட அறிவிப்பை மட்டும் தரமா செய்றீங்க.
கட்சி மாநாட்டு செய்தியை எதிர்பார்க்கும் போது கேரளத்துக்கு இப்படி ஜொள்ளு விடுறீங்களே
பாஸ்… உடனே இதை டெலீட் பண்ணுங்க’’ என்று அவரது ரசிகர்களும் கோரிக்கை வைக்கிறார்கள்.
அரசியல்ன்னா என்ன
என்பதை விஜய் இப்போது புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பார்.