Share via:

சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
அன்று பாமக சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி,
இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அன்புமணி எச்சரிக்கை செய்திருப்பது
மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
சித்திரை முழு நிலவு மாநாட்டை ஒட்டி அன்புமணி ராமதாசை முன்னிலைப்படுத்தும்
வகையில் இருந்த பாடலும், அடுத்ததாக அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா
என்ற பாடலும் பெரும் சர்ச்சையை உருவாக்கின. இந்த நிலையில் இன்று அன்புமணி ஒரு வீடியோ
வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ‘’11ம் தேதி ஞாயிறு மாமல்லபுரத்தில் சித்திரை
முழு நிலவு மாநாடு நடைபெறுகிறது. இது சமூக உரிமைக்கான மாநாடு. அன்றைய தினம் லட்சக்கணக்கான
தொண்டர்கள் வருவார்கள், எனவே பொதுமக்கள் இசிஆர், ஓஎம்ஆர் சாலையை பயன்படுத்துவதைத் தவிர்க்க
வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதையடுத்து “புஜங்களை தூக்கிக்கொண்டு ம்ம்..என்ற சத்தத்துடன்
கலவரத்திற்காக பாட்டாளி மக்கள் கட்சியினர் ஊர் சுற்றி வருவார்கள், ரவுடித்தனத்தில்
ஈடுபடுவார்கள், எனவே மக்களே ஒதுங்கிக்கொள்ளுங்கள் அரசியல் படுத்தப்பட்ட பாமகவினர் வருவார்கள்..
எனவே அவர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று சொல்கிறார். உண்மையில் அவரது கட்சித்
தொண்டர்களுக்கு எச்சரிக்கை தர வேண்டும், மக்களுக்குத் தொந்தரவு இல்லாமல் நடந்துகொள்ளுங்கள்
என்று வீடியோவில் வழி காட்டியிருக்க வேண்டும். எல்லாமே தப்புத்தப்பா இருக்குதே’’ என்று
கிண்டல் செய்கிறார்கள்.
இதற்கு பாட்டாளிகள், ‘’அரசு அறிவிக்க வேண்டிய ஒரு விஷயத்தை நல்லெண்ண
அடிப்படையில் அன்புமணி பேசியிருக்கிறார். மாநாடு இருக்கிறது லட்சக்கணமாக மக்கள் கூடுவார்கள்
போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவதால் இன்னல்களை தவிர்க்க மக்களை அன்போடு கேட்டுக் கொண்டதை
வழக்கம்போல் வன்னியர்கள் மீதும் பாமக மீதும் வன்ம கும்பல் கதறுகிறது.’’ என்கிறார்கள்.