Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2025/02/MergedImages-2025-02-07T120731.874.jpg)
திருப்பரங்குன்றம்
விவகாரம், கும்பமேளா மரணம், அமெரிக்காவில் இருந்து விலங்குடன் இந்தியர்கள் திருப்பப்பட்ட
அவமானம் ஆகியவற்றுக்குக் குரல் கொடுக்காத நடிகர் விஜய் திடீரென ஜாதிவாரி கணக்கெடுப்பு
நடத்தவில்லை என்று மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவரைப் போலவே சீமானும்
இந்த விஷயத்துக்கு மட்டும் குரல் கொடுத்திருக்கிரார்.
சீமானுக்கும் விஜய்க்கும்
இடையில் மிகப்பெரும் யுத்தம் நடப்பதாக அவர்களுடைய கட்சியினர் சண்டை போட்டு வரும் நேரத்தில்,
இருவரும் சொல்லிவைத்தது போன்று ஒரே நேரத்தில் ஒரே கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள்.
இவர்களுக்கு ஒரே நேரத்தில் டெல்லி அசைன்மென்ட் கொடுத்துள்ளது என்று உடன்பிறப்புகள்
போட்டுத் தாக்குகிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சி
செய்யும் தெலுங்கானாவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடியும் என்றால் தமிழகத்தில்
ஏன் செய்ய முடியாது என்று இருவரும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். தமிழக அரசு ஜாதிவாரிக்
கணக்கெடுப்பு நடத்தி, அதனை அறிவித்தால் என்ன என்றும் கேட்டிருந்தார்கள்.
இந்த விவகாரத்தில்
தி.மு.க.வினர், ‘’2021ல் எடுக்கவேண்டிய சென்சசை இதுவரை எடுக்காமல் திருட்டு வேலை செய்துவரும்
பாஜகவைக் காப்பாற்றுவதுதான் நாம் தமிழர் சீமான் மற்றும் புதிய கட்சி தொடங்கியிருக்கும்
விஜய்யின் நோக்கம். இந்தியாவிலேயே அதிக சதவீத இட ஒதுக்கீடு உச்சத்தை வைத்திருக்கும்
தமிழ்நாட்டுக்கு, அதை இதுவரை சாதிக்க முடியாத மாநிலங்களை உதாரணம் காட்டி கணக்கெடுப்பு
எடுப்பதில் பயன் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாதா..?
எந்த பயனும் இல்லை
என்றாலும் சர்வே எடுக்கச் சொல்வது என்பது பாமக போன்ற சாதிக்கட்சிகள் மட்டும் தான்.
தங்கள் சாதியினரின் எண்ணிக்கையைக் காட்டி பேரம்
நடத்தலாம் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் தான் அவர்களும் குரல் கொடுக்கிறார்கள். தமிழக
அரசு உண்மையில் கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்கள் எண்ணிக்கை குறை என்று சொன்னால், அதை
ஏற்க முடியாது என்றே அறிவிப்பார்கள்.
ஆகவே, உண்மையில்
இட ஒதுக்கீட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்றால் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு
எடுக்கும் தரவை வைத்துதான் செய்யமுடியும். இதை நீதிமன்றங்கள் பலமுறை உறுதி செய்தாயிற்று.
இதையெல்லாம் மக்களுக்கு விளக்க வேண்டும். மோடி அரசின் திருட்டுத்தனத்துக்கு விஜய்யும்
சீமானும் துணை நிற்கிறார்கள்’’ என்கிறார்கள்.