News

மோடியை வரவேற்பாரா செங்கோட்டையன்..? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

Follow Us

குஷ்பு பற்றி கன்னாபின்னாவென்று பேசி கட்சியிலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இப்போது அவர் விஜய் தொப்பி அணிந்து நோன்பு திறந்த விவகாரத்தில்  இஸ்லாமியர்களைப் பற்றி கேவலமாகப் பேசி மாட்டியிருக்கிறார். இந்த விவகாரத்தை விஜய் கட்சியினர் கடுமையாக டிரோல் செய்துவருகிறார்கள்.

இது குறித்து பேசும் விஜய் கட்சியினர், ‘’விஜய் இஸ்லாமிய சகோதரர்களுடன் நோன்பு திறந்ததை தரம்தாழ்ந்து விமர்சித்ததோடு, உச்சமாக, இஸ்லாமிய சகோதரர்களை எச்சசோறு உண்பவர்கள் என்று வரம்புமீறிப் பேசினார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற தரம்கெட்ட பேச்சாளர்களை வளர்த்தெடுக்கும் தி.மு.க. தலைமையின் உள்மனத்திட்டம் இந்தப் பொதுக்கூட்டத்தின் மூலம் உமிழப்பட்டிருக்கிறது. அரசியல் நாகரிகம் என்ற சொல்லையே முற்றிலும் மறந்து,துறந்து அநாகரிக அரசியலையே வளர்த்தெடுப்பதுதான் தி.மு.க. தலைமையின் தொன்றுதொட்ட வேலை.

சிறுபான்மை இன மக்களின் பாதுகாவலன் என்று சித்தாந்த வேஷம் போடுவது, மதச்சார்பற்ற கூட்டணி என்று பெயர் மட்டும் வைத்துக்கொண்டு, எல்லா மதங்களையும் கீழ்த்தரமாக தங்கள் ஏவல் பிராணிகளை வைத்து விமர்சிக்கச் செய்வது எல்லாம்தான் தி.மு.க. தலைமையின் உண்மை முகம். பா.ஜ.க.தான் சிறுபான்மை மக்களின் நேரடி எதிரி. அதேபோல சிறுபான்மை மக்களின் மறைமுக எதிரிதான் இந்த தி.மு.க. தலைமை. பா.ஜ.க.வுடன் இருக்கும் மறைமுகக்கூட்டால்தான், இதுவரை மறைமுகமாக இருந்த சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்புணர்வு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களால் நேரடியாக வெளிப்பட்டுள்ளது.

இஸ்லாமிய சகோதரர்களுடனும், அனைத்து சிறுபான்மை சகோதர மக்களுடனும் மற்றும் அனைத்து மதங்களைச் சேர்ந்த அனைத்து மக்களுடனும் சகோரத்துவம் பேணும் இணக்கமிக்க மதநல்லிணக்கம் பேணும் உண்மையான உணர்வுள்ள தலைவர்தான் நம் வெற்றித் தலைவர். அவர் கலந்துகொண்ட நோன்பு திறப்பில் பங்கேற்ற இஸ்லாமிய சகோதரர்களை இழிவாகப் பேசியது சிவாஜியின் வாய் மட்டுமே.அதன் உண்மையான குரல் எதுவென்று கேட்டால், இதுபோன்ற பேச்சாளர்களை அடிக்கடி அழைத்துப் பாராட்டும் தி.மு.க.வின் முக்கிய குரல்தான் அது என்பதை அனைவரும் அறிவர். வரம்புமீறிப் போகும் இவர்களை, மக்களே என்ன செய்யப் போகின்றனர்?”’ என்று கேள்வி எழுப்புகின்றனர்.

திமுகவின் சீமான் தான் இந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. அதனால் ஆபாசமாக பேசி விட்டார் என்று இரண்டு மாதம் சஸ்பெண்ட் செய்கின்றோம் என்று ஒரு நாடகம் நடக்கும் என்கிறார்கள். பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link