Share via:
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.ய கண்ணீர்விட வெச்சதா எஸ்.பி.பி. பேசியிருக்காரு. அது என்னன்னு தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க மக்களே.
800க்கும் மேற்பட்ட படங்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையமைச்சாரு. மல்டி டேலண்டடா இருந்த எம்.எஸ்.வி. ஒரு நாள் எஸ்.பி.பி.க்கு போன் பண்ணி ஏ.ஆர்.ரகுமான பத்தி பேசி கண்ணீர்விட்டாராம்.
அதாவது சங்கமம் படத்துல ஆலாலகண்டா ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க பாட்ட பாடுறதுக்காக ஏ.ஆர்.ரகுமான் என்னை கூப்டாரு. அவர் சொல்லிக் கொடுத்து நான் பாடினபோதுதான் தெரிஞ்சுது நான் எவ்வளவு பேர டார்ச்சர் பண்ணியிருக்கேன்னு.
கொஞ்சம், கொஞ்சமா விட்டுவிட்டு தான் பாடினேன். உடனே போதும்னு என்ன அனுப்பி வெச்சிட்டாரு. நான் சரியா பாடலையோன்னு கவலையோட வீட்டுக்கு வந்துட்டேன். அப்புறம் பாட்டு ரிலீசானப்பதான் தெரிஞ்சுது. ஏதோ எடிட்டிங்காமே. என்னென்னமோ பண்ணி அந்த பாட்ட ரொம்ப பிரமாதமா எடுத்தாருன்னு பாராட்டினாராம். அதோட நல்ல சம்பளம் கொடுத்தாருப்பா. நான் இந்த அளவுக்கு சம்பளமே வாங்கினதே இல்லன்னு ஏ.ஆர்.ரகுமான பாராட்டி எம்.ஸ்வி. ஆனந்தகண்ணீர் விட்டதா பேசினாரு எஸ்.பி.பி.