News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இந்து அறநிலையத்துறை சார்பில் நேரடி நியமனம் செய்யப்பட்ட 5 பெண் ஓதுவார்கள் உள்ளிட்ட மொத்தம் 15 பேருக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பணி ஆணைகளை வழங்கினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கோவில்களில் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட பெண் ஓதுவார்களான தாரணி, சாருமதி, சிவரஞ்சனி, கோமதி, பார்கவி ஆகிய 5 பெண் ஓதுவார்களுக்கான பணி ஆணைகளை வழங்கினார்.

5 பெண் ஓதுவார்கள் உள்ளிட்ட 15 ஓதுவார்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டதுடன், திருக்கோவில்களில் பணி காலங்களில் மரணமடைந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் 3 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் அமைச்சர் சேகர் பாபு வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, ‘‘திருக்கோவில்களில் புதிதாக தேர்ச்சி பெற்ற 5 பெண் ஓதுவார்களை நியமிப்பது மிகவும் பெருமையான ஒன்று. இந்த பணிகளை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link