Share via:
தி.மு.க. அரசை தொடர்ந்து விமர்சனம் செய்துவந்த சவுக்கு சங்கர்
பெண் காவலர்களை இழிவு படுத்திய விவகாரத்தில் கைது செய்து கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்படுவதைப் பார்க்கும் போது
ஆயிரம் வழக்குகள் பதிவாகும் போல் தெரிகிறது.
இந்த விவகாரத்தையொட்டி சவுக்கு சங்கர் அலுவலகத்திலும் அவரது ஓட்டுநர்
ராஜரத்தினம் வீட்டிலும் நடந்த ரெய்டில் ஒன்றேகால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக
சொல்லப்படுகிறது. சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற
சோதனை நிறைவுக்கு வந்தது. இந்த சோதனையின் முடிவில் கஞ்சா சிகரெட்டுகள், லேப்டாப் ஹார்ட்
டிஸ்க் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
இந்த ஹார்ட் டிஸ்கில் பல்வேறு நபர்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதற்கு
வாய்ப்பு இருப்பதாக செய்தி பரவுகிறது. இது மட்டுமின்றி, கடந்த இரண்டு வருட காலத்தில்
மட்டும் மார்க்கெட் மதிப்பில் சுமார் 30 கோடி ருபாய் அளவுக்கு அசையா சொத்துக்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும்
சொல்லப்படுகிறது.
இதுதவிர, பல்வேறு நபர்களுக்கு லட்சக்கணக்கில் மாதா மாதம் பணம்
வழங்கப்பட்டிருக்கிறது. அத்தனையும் ஆதாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
இதையடுத்து இத்தனை காலமும் சவுக்கு சங்கருக்கு ஆதரவு கொடுத்த முக்கிய நபர்கள் அமைதியாகியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள்
குறித்தும், அவர்களது பணி குறித்தும் ஆபாசமாக அவதூறாக பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர்
மீது நடவடிக்கை எடுக்க கோரி உதகை சைபர் கிரைம் போலீசாரிடம் உதகை புதுமந்து காவல் ஆய்வாளர்
அல்லிராணி புகார் கொடுத்துள்ளார்.
ஏற்கெனவே மதுரை, சென்னையிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கும்
நிலையில் ஊட்டிக்கும் அலையவேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார். ஆயிரம் வழக்குகள் வாங்கி
சாதனை படைப்பார் என்று உடன்பிறப்புகள் குதூகலமாக கொண்டாடி வருகிறார்கள்.