Share via:
அதனை நம்பக்கூடாது என்று மக்களுக்குப் பாடம் எடுத்த ஜக்கி வாசுதேவ்,
தனக்கு ஒரு பிரச்னை என்றதும் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்து உயிரைக் காப்பாற்றிக்
கொண்டுள்ளார்.
ஜக்கியின் பேச்சைக் கேட்டாலே பரவசமாக இருக்கும். பாதரசம் உண்பது,
பாம்பு விஷம் குடிப்பது, போலி மருத்துவத்தை பரப்புவது, ஆயுர்வேதாவும், சித்தாவும் மட்டுமே
சரியாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
தனக்கு ஒரு பிரச்னை என்றதும் அப்பல்லோ மருத்துவமனையில் போய் சிகிச்சை
எடுத்துக்கொண்டார். மூளையில் ரத்த கசிவுக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது.
ஆனால் இப்போது அவர், ‘மருத்துவர்கள் தன் தலையை ஆய்வு செய்தார்கள்…
தனக்கு மூளையில் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கண்டு திரும்ப ஒட்டி விட்டார்கள்’
என்று காமெடி செய்கிறார்.
இவர் உயிர் பிழைத்த பிறகு தான், அவர் மருத்துவமனையில் சிகிச்சை
பெற்ற விபரமே வெளியே தெரியவந்தது. அவருக்கு ஏதேனும் ஆகியிருந்தால், அப்படியே ஆவியாகி
ஈசனுடன் கலந்துவிட்டார் என்று பொய் செய்தியை பரப்பியிருப்பார்கள்.
யோகாவும், ஆன்மீகமும் மக்களைக் காப்பாற்றாது நவீன மருத்துவமும்
அறிவியலும் மட்டுமே கை கொடுக்கும் என்பதை ஈஷா மக்கள் இனியாவது புரிந்துகொள்ளட்டும்.