Share via:
வினேஷ் போகத் விவகாரத்தின் காயமும்,
வேதனையும் ஆறுவதற்குள் மல்யுத்த
வீராங்கனை ஆண்டிம் பங்கல் மற்றும்
அவருடனான ஒட்டுமொத்த குழுவும் பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து
வெளியேற்றப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது.
அதேநேரம், வீரர்களை விட அதிக எண்ணிக்கையில் பிற ஊழியர்கள் அனுப்பப்பட்ட தகவலும்ம் வெளியாகி
பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
கடந்த டோக்கியோ
ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்தியா செலவளித்த தொகை
13.13 கோடி ரூபாய். இந்த பாரீஸ்
போட்டிகளுக்கு 33.68 கோடி ரூபாய். இதில்
வேதனை என்னவெனில், இந்தியாவின் சார்பில் சென்ற விளையாட்டு
வீரர்களின் எண்ணிக்கை 117 ஆனால் அதிகாரிகளின் எண்ணிக்கை
140. கென்யா நாட்டு வீரர் ஒருவரின்
பதக்கம் பறிக்கப்பட்ட போது அந்த அதிகாரிகள்
மேல்முறையீடு செய்து அதனை திரும்ப
பெற்றனர், ஆனால் 140 இந்திய அதிகாரிகள்
கலந்துகொண்டும் அதற்கான முயற்சியில்
யாரும் ஈடுபடவில்லை என்பது தான் சோதனை.
இந்த நிலையில் 53
கிலோ எடை பிரிவில் இந்திய
வீராங்கனை ஆண்டிம் பங்கல் காலிறுதி
ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை ஜெய்நெப்
யெட்கில்லிடம் எதிராக 10-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் ஆண்டிம் பங்கல் தனக்கு மட்டுமே
அனுமதி உள்ள அங்கீகார அட்டையை
தன் சகோதரியிடம் கொடுத்து
ஒலிம்பிக் கிராமத்துக்குள் அனுப்பியுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் பிடிபட்டார். இதையடுத்து ஆண்டிம் பங்கல்
மற்றும் அவரது பயிற்சியாளர்கள் அடங்கிய
குழுவினருக்கான அங்கீகாரத்தை சர்வதேச ஒலிம்பிக் சங்கம்
ரத்து செய்தது. இதனால், ஒலிம்பிக்
கிராமத்தில் இருந்து அவர்கள் உடனடியாக
வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இன்னும் என்னவெல்லாம்
நடக்கக் காத்திருக்கிறதோ..? பேசாமல் ஒட்டுமொத்த அணியும் திரும்பிவிடலாம்.