Share via:
வெறுப்பு பேச்சு விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது
மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலம் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் அளித்த புகாரின்பேரில்
அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு. அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில்
வழக்கு தொடர தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கெனவே சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ். இவர் சேலம்
மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்து இருந்தார். அந்த மனுவில், ’இந்து கலாசாரத்த அழிப்பதற்காக
தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகள் வெளிநாட்டில் இருந்து
பணத்தை வாங்கிக் கொண்டு வழக்கு போடுகின்றன’ என்று அண்ணமலை வெறுப்புப் பேச்சு பேசியிருப்பதாகக்
கூறியிருந்தார்.
இந்த நிலையில் அடுத்த
வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது மத நம்பிக்கைக்கு
உயிரை கொடுக்க வேண்டும் என்ற வகையில் அண்ணாமலை பேசியது குறித்து புகார் செய்திருந்தார்.
ஆக, இந்த விஷயத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்
வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அண்ணாமலை கைது செய்யப்படுவது உறுதி என்கிறார்கள்.