News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பத்திரிகையாளர்களின் உதயநிதி சந்திப்பு குறித்து பேசிய அண்ணாமலை பல்லுபடாம என்ற எசகுபிசகான வார்த்தையை பயன்படுத்தியது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதே போன்று ஒரு வார்த்தையை தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பயன்படுத்தியிருந்தால் எந்த அளவுக்கு எதிர்க்கட்சியினர் பிரச்னை செய்திருப்பார்கள், ஆனால் அண்ணாமலை அப்படியொரு வார்த்தையைப் பயன்படுத்தி பத்திரிகையாளர்களை அவமானப்படுத்திய பிறகும், யாருமே கண்டுகொள்ளவில்லை என்று தி.மு.க.வினர் பொங்கினார்கள்.

தங்களுக்கு ஆதரவு தரவில்லை என்றால் பத்திரிகையாளர்களை பா.ஜ.க. இப்படித்தான் நேரடியாக தாக்குதல் நடத்துவார்கள், அவமானப்படுத்துவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர்கள் தவிர, வேறு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், ‘பல்லுபடாம’ என்ற வார்த்தைக்கு மீண்டும் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் அண்ணாமலை. அதாவது கொங்கு பகுதியில் மாட்டுக்கு பால் கறக்கும்போது இப்படிப்பட்ட வார்த்தைகளை வெகு சாதாரணமாக பயன்படுத்துவார்கள். இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்க மாட்டேன். தேவைப்பட்டால் நான் மீண்டும் இந்த வார்த்தையை பயன்படுத்துவேன் என்று அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரம் கொங்கு மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தெரியாமல் வாய் தவறி சொன்ன வார்த்தையை சமாளிப்பதற்காக இப்படி கொங்கு மக்கள் மீது ஒட்டுமொத்தமாக பழி சுமத்தலாமா என்று கொதித்து வருகிறார்கள்.

அதுசரி, மோடியிடமும் அமித் ஷாவிடமும் இப்படிப்பட்ட வார்த்தைகளை அண்ணாமலை சாதாரணமாக பயன்படுத்துவாரா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு அண்ணாமலை தான் பதில் சொல்ல வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link