Share via:
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு பகுதியில் செந்தில் பாலாஜியின்
ஆதிக்கம் இருக்கக்கூடாது என்பதற்காகவே, அவருக்கு இன்னமும் ஜாமீன் கொடுக்காமல் இழுத்தடிக்கிறது
பா.ஜ.க. அரசு. ஆனால், சிறையில் இருந்தாலும் கரூர் டீம் களத்தில் இறங்கி அண்ணாமலைக்கு
ஆட்டம் கொடுக்கிறது.
செந்தில் பாலாஜி இங்கு இல்லை என்ற தைரியத்தில் தான் அண்ணாமலை தைரியமாக
கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். ஏனென்றால் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஒரு
தொகுதி கூட கிடைக்காத மாவட்டம் கோவை மாவட்டம். அந்த அளவுக்கு அ.தி.மு.க. கூட்டணி அத்தனை
தொகுதிகளையும் வாரி சுருட்டியது. எப்படியும் கூட்டணி சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கை
உடைந்து போனாலும் பா.ஜ.க.வுக்கு இந்த தொகுதியில் நிறைய ஆதரவு உண்டு என்று நம்புகிறார்
அண்ணாமலை.
அவருக்கு எதிராக அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ஜி ராமச்சந்திரன்
பாரம்பரியமான திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தவர். முன்னாள் சிங்காநல்லூர் எம்.எல்.ஏ
கோவிந்தராஜுவின் மகன். தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஏற்கனவே கோவை மேயராக இருந்து
மக்கள் பணியாற்றியவர்.
இந்த சூழலில் அண்ணாமலைக்கு டெபாசிட் கிடைக்காத அளவுக்கு தோற்கடிக்க
வேண்டும் என்பதற்காக தி.மு.க.வினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். செந்தில் பாலாஜி சிறையில்
இருந்தாலும் அவரது உத்தரவுப்படி கரூர் டீம் களத்தில் இறங்கியிருக்கிறது. இதனை எப்படி
முறியடிப்பது என்று புரியாமல் அண்ணாமலை ஆட்கள் தடுமாறுகிறார்கள்.