Share via:
Lலண்டனில் படிப்பு முடித்துவிட்டு அண்ணாமலை திரும்பிவருகிறார் எனும் நிலையில் அவருக்கு சரத்குமார் தொடங்கி பழைய நிர்வாகிகள் அனைவரும் வருக வருக என்று வரவேற்பு கொடுத்துவருகிறார்கள். கடந்த மாதமே படிப்பு முடிந்துவிட்டாலும் இன்னமும் தலை காட்டாமல் பதுங்கியிருக்கிறார் அண்ணாமலை.
இந்த நிலையில் தமிழகமெங்கும்
ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார
அமைப்புகள் இன்று 1500 இடங்களில்
ரகசியக் கூட்டம் நடத்துவதாகத் தகவல் சொல்லப்படுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. அதாவது,
இங்கு பேசப்படும் விஷயங்களை சமூக வலைதளங்களில்
பதிவிடக் கூடாது, புகைப்படம் அல்லது
செல்பி எடுக்கக் கூடாது என்றெல்லாம் சொல்லி அழைத்திருக்கிறார்கள்.
அவரவர் பகுதியைச்
சேர்ந்த முக்கியப் பிரமுகர்களை வளைத்துப் பிடித்து கட்சிக்குள் கொண்டுவந்து சேர்ப்பது
முக்கியமான அஜெண்டாவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு பதவி, பரிசு என்று
ஆசை காட்டப்படுவதுடன், இணங்கி செயல்பட மறுத்தால் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க
வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது. இவை எல்லாமே அண்ணாமலைக்கு ஆதரவாக
பா.ஜ.க.வை பலப்படுத்தும் முயற்சி என்றே சொல்லப்படுகிறது.
டிசம்பர்
6 ஆம் தேதியன்று பாபர் மசூதி
இடிப்பு தினம் வரக்கூடிய நிலையில்
இத்தகைய ரகசியக் கூட்டங்கள் தமிழ்நாட்டின்
அமைதியைக் குலைக்க வாய்ப்புள்ளது என்றும்
குற்றம் சாட்டப்படுகிறது. விஜய் அரசியலுக்குள் வந்திருக்கும் சூழலில் அண்ணாமலையின்
வருகையால் தேர்தல் அரசியல் மேலும் சூடுபிடிக்கிறது.