Share via:
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில்
சர்வதேச அரசியல் குறித்து படிப்பதற்காக நாளை லண்டன் செல்லும், பாஜக தமிழக மாநிலத்தலைவர்
அண்ணாமலைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். இந்த நிலையில் தனக்கு இடைக்கால
பொறுப்பு வழங்கப்படும் என்று காத்திருந்த தமிழிசை பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 3 மாதங்கள்
லண்டனில் தங்கியிருந்து, அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து
அண்ணாமலை படிக்க உள்ளர். அண்ணாமலை மாற்றப்படுவாரா அல்லது இடைக்காலத் தலைவர் நியமனம்
செய்யப்படுவாரா என்று கேள்விகள் எழுப்பப்படன.
ஆனால், அண்ணாமலை
லண்டன் சென்றாலும், அங்கிருந்தபடியே, கட்சி விவகாரங்களை கவனித்துக் கொள்வார். அதேநேரம்
கட்சியின் அமைப்பு ரீதியான பணிகளை வழக்கம் போல, பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளர்
கேசவ விநாயகம் பார்த்துக்கொள்வார் என்று மீண்டும் ஒரு முறை உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இடைக்காலப் பொறுப்பாவது
கிடைக்கும் என்று காத்திருந்த தமிழிசை செளந்தரராஜன், நயினார் நாகேந்திரன் போன்றவர்கள்
கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
மேலும், 2026-ல்
சட்டப்பேரவை தேர்தலிலும், அண்ணாமலையே தலைவராக தொடர்வார் என்பது தெளிவாகியிருப்பதால்,
வேறு வழியின்றி மூத்த தலைவர்களும் தேடிச்சென்று அண்ணாமலையை வாழ்த்திவருகிறார்கள்.