Share via:
தமிழக பா.ஜ.க. இப்போது சீனியர்கள் கைக்கு மீண்டும் வந்துவிட்டது.
அதனால் உட்கட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் கிடுகிடுவென நடந்துவருகிறது. அண்ணாமலை போடும்
பதிவை தமிழக பா.ஜ.க. கண்டுகொள்ளாத நிலை வந்துவிட்டது.
எனவே பா.ஜ.க.வில் ஒரு டீம், ‘’அண்ணாமலை லண்டனுக்குப் படிக்கப்
போகவில்லை, டெல்லி மேலிடத்தின் உத்தரவுப்படி வெளிநாட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.
தமிழக அரசியல் பற்றி பேசக்கூடாது என்றும் கண்டிப்பு காட்டப்பட்டுள்ளது. அவர் லண்டன்
காலேஜிக்குப் போனதை யாராவது பார்த்தீர்களா..?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
அதற்கு பதில் அளிப்பது போன்று, ’திராவிட தலைவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக
அரசியல் பாடம் எடுத்த எங்கள் தலைவர் அண்ணாமலை லண்டன் மாநகரில் மாணவராக மேலும் படித்து
வருகிறார். தங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் தலைவரே..’ என்று கூறி போட்டோ போட்டு
வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கு தி.மு.க.வினர்,
‘’இந்த படிப்பு படிக்க யார் வேணும்னாலும் விண்ணப்பிக்கலாம்.ஈசியா கிடைக்கும். அரசு
பதவியில் இருந்தவர்கள்,அரசியல்கட்சியில் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பித்து
படிக்கலாம். வகுப்பறையில் இருக்கும் லைவ் வீடியோ வெளியிட்டால் தான் நம்புவோம்’’ என்கிறார்கள்.
வெளிநாட்டுக்குப்
போனாலும் அண்ணாமலையை விட மாட்டீங்களா..? கொஞ்சம் படிக்க விடுங்கப்பா