Share via:
ஃபெஞ்சல் புயல் மற்றும் பருவமழை காரணமாக சென்னை, விழுப்புரம்,
திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பெருத்த சேதங்களை சந்தித்து உள்ளன. புயல்
பாதிப்புகளுக்கு தமிழ்நாட்டிற்கு உரிய நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க
வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது; இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர்
அண்ணாமலை, ‘’ஃபெஞ்சல் புயல் பாதிபுக்காக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ரூ.944 கோடியை
ஒதுக்கி உள்ளது’’ என்று நன்றி தெரிவித்திருந்தார்.
இரண்டே நாளில் நிதி பெற்றுத்தந்த அண்ணாமலை வாழ்க என்று அவரது ஆதரவாளர்கள்
பாராட்டித்தள்ளினார்கள். இந்த நில்லையில், இந்த ஃபெஞ்சல் புயலுக்காக மத்திய அரசு அளிக்கவில்லை
என வெடிகுண்டு வீசியிருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு, இதுகுறித்து அவர், ‘’ தமிழ்நாடு
அரசு குற்றம்சாட்டி வருகிறது
இதுதொடர்பாக தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு
பேட்டி அளிக்கையில்,”ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான
தனது பங்கு தொகை ரூ. 944 கோடியை விடுவித்துள்ளது. 2024-2025-ம் ஆண்டிற்கான மாநில பேரிடர்
நிவாரண நிதிக்கான தனது பங்குத்தொகையான ரூ. 944.80 கோடியைத் தான் ஒன்றிய அரசு தற்போது
விடுவித்துள்ளது. இந்தத் தொகையானது கடந்த ஜூன் மாதத்திலேயே விடுவிக்கப்பட்டிருக்க வேண்டியது.
காலம் தாழ்த்தப்பட்டு தற்போது தான் அந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாநிலங்களில்
பெய்த அதி கனமழை காரணமாக ஏற்பட்ட பேரிடர்களுக்கான நிவாரண நிதியாக மாநில அரசுக்கு ரூ.
37,906 கோடி தர ஒன்றிய அரசை வலியுறுத்தியிருந்தோம். ஆனால், ஒன்றிய அரசிடம் இருந்து
நாம் பெற்றது அதில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான தொகைதான். அதாவது, ரூ.276 கோடி மட்டுமே.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 14 மாவட்ட மக்களின்
நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக ஒன்றிய அரசு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.
6,675 கோடியை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு நிதி வழங்கப்படவில்லை.
ஆனால், ஒன்றிய அரசு தற்போது விடுவித்துள்ள மாநில பேரிடர் நிவாரண நிதித் தொகையை ஃபெஞ்சல்
புயல் பாதிப்புக்காக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகத் தவறான பிம்பம் பரப்பப்பட்டு
வருகிறது…’’ என்று போட்டுக் கொடுத்துள்ளார்.
அண்ணாமலை இதுக்கு பதில் சொல்வாரா..?