News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மத்திய கல்வித் திட்டத்தை எந்த வகையிலும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவந்த ஸ்டாலின் தமிழகத்தில் மத்திய கல்விக் கொள்கையை உள்ளடக்கிய பி.எம். ஸ்ரி பள்ளிகளை செயல்படுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு 60 சதவிகித நிதியும் மாநில அரசு 40% நிதியும் கொண்டு இந்த பள்ளி செயல்படும். தமிழகம், கேரளா, டெல்லி, மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்தில் சேராமல் நின்றன. ஆனால், திடீரென அரசு ஆணை மூலம் இந்த பள்ளிகளை தொடங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்திருக்கிறார். அவர், ’பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த, 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையில் வரையறுக்கப்பட்டுள்ள, காலை உணவுத் திட்டம், தன்னார்வலர்கள் மூலம் சமுதாயத்தை உள்ளடக்கிய பயிற்றுவித்தல் (இல்லம் தேடிக் கல்வி) போன்றவற்றை, வேறு வேறு பெயர்களில் செயல்படுத்திய தமிழக அரசு, தற்போது, முழுவதும் தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள, PM Shri பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

பள்ளி மாணவர்கள், பல்துறை அறிவையும், பலமொழிப் புலமையும், தொழிற்கல்வித் திறனையும் ஒருங்கே பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020, அடுத்த தலைமுறைக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள உதவும் கருவியாக அமையும். நமது மாணவர்கள் நலனுக்காக, தமிழக அரசு, அனைத்துப் பள்ளிகளிலும், இதனை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு தி.மு.க. என்ன பதில் வைத்திருக்கிறது..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link