News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அமைந்திருக்கும் அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அண்ணாமலை வருகைக்காக அத்தனை மாணவிகளும் காவி நிறத்தில் சேலை கட்டி அமர வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த கூட்டத்தில் ஆவேசமாகப் பேசிய அண்ணாமலை, ’பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பெரும்பான்மையான வீடுகள் குடும்பத் தலைவிகள் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டிருப்பது, புகையற்ற சமையலுக்காக இலவச சமையல் எரிவாயு இணைப்பு, முத்ரா கடனுதவி மூலம் பெண் தொழில் முனைவோருக்கு முன்னுரிமை’ என்று மோடியின் சாதனைகளைப் பேசினார்.

இதையடுத்து மாலையில் பர்கூரில் நடைபெற்ற பயணத்தில், ‘ஊழல், ஜாதி அரசியல், அடாவடித்தனம், குடும்ப அரசியல் இவை நான்கும் திமுக அரசு அமர்ந்திருக்கும் நாற்காலியின் நான்கு கால்கள். திமுக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் ஜெயிலிலும், ஒரு அமைச்சர் பெயிலிலும் இருக்கிறார்கள். இன்னும் ஐந்து அமைச்சர்கள் மீது, பாஜக ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

ஜாதியை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்து, இன்று தேர்தலுக்கு முன்பாக ஜாதிக்கலவரத்தை உருவாக்கி வாக்கு வாங்குவது திமுகவின் வழக்கம். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக வாரிசு அரசியல்தான் செய்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகம் இந்தியாவிலேயே அதிகப்படியான கடன் வாங்கிய மாநிலம் ஆகியிருக்கிறது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு வாராவாரம் பாராட்டு விழா நடத்தியதுதான் திமுக தமிழ் மொழியை வளர்த்த முறை. கடந்த ஆண்டு, 55,000 குழந்தைகள் தமிழ் மொழித் தேர்வில் தோல்வியடைந்தது தான் திமுக தமிழ் மொழியை வளர்த்ததற்குச் சான்று.

ராகுல்காந்தியும் உதயநிதியும் வாரிசு அரசியலின் மிச்ச அடையாளங்கள். உதயநிதியை 5 முறையும், ராகுல்காந்தியை 17 முறையும் முன்னிறுத்தி இருக்கிறார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள், நமது பிரதமர் மோடி அவர்களை வெல்ல ராகுல்காந்தியால் முடியாது என்ற உண்மையைக் கூறியதற்கு, அவருக்கு கட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்…’’ என்று பேசியிருக்கிறார்.

ப.சிதம்பரத்தை கடுமையாக எதிர்த்துவரும் பா.ஜ.க. அவரது மகன் பேச்சுக்கு ஆதரவு கொடுத்து பாராட்டியிருப்பது புதிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சிதம்பரத்துக்கும் அவரது மகனுக்கும் இனி எம்.பி. சீட் கொடுக்க மாட்டார்கள் என்பதல் அவர்கள் பா.ஜ.க.வுக்கு தாவுவதற்கு முடிவு செய்திருக்கிறார்களா என்பதும் கேள்வியாக நிற்கிறது.

அரசியலில் எதுவும் நடக்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link