Share via:

மிஸ்டர் பணிவு என்று அறியப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பணிவானவர் மட்டும்
இல்லை அதற்கும் கீழே கொத்தடிமை மனப்பான்மை உள்ளவர் என்பதை தொலைக்காட்சி பேட்டியில்
அவர் ஒப்புக்கொண்டதைக் கண்டு, அவரது ஆதரவாளர்களே அதிர்ச்சி அடைகிறார்கள்.
தனியார் தொலைக்காட்சிக்கு பன்னீர்செல்வம் கொடுத்த பேட்டியின் மூலம்
அவருக்கும் தலைமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உறுதிபடுத்தியிருக்கிறார். இப்போது
பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு 41 வயது ஆகிறது. அதேநேரம், ஓ.பி.எஸ்ஸின்
வயது 74. ஆனால் பேட்டியில் அண்ணன் அண்ணாமலை என்று சொல்கிறார்.
மாற்றுக் கட்சியின் மாநிலத் தலைவர் என்பதால் திரு.அண்ணாமலை என்பது
வரை அது பதவிக்கு கொடுக்கும் மரியாதையாக ஏற்கலாம். ஆனால் தன்னை விட வயது குறைந்தவர்
ஒருவரைப் பார்த்து, அண்ணன் அண்ணாமலை என்று சொல்லி அதிர வைத்தார்.
நான் மோடியின் தீவிர பக்தன் என்றும் கூறியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
அ.தி.மு.க. வேட்டி கட்ட முடியவில்லை என்று வருத்தப்படுவதைப் பார்த்தாலே, இவரை ஏன் கட்சியினரும்
தொண்டர்களும் ஒதுக்கி வைத்தார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும். இவர் பேசுவதைப் பார்த்தால்
பா.ஜ.க.வில் சேருவதைத் தவிர வேறு வழியே இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில்
மகாசிவாராத்திரி கொண்டாட்டத்துக்கு தமிழகத்துக்கு வந்து சேர்ந்திருக்கும் அமித் ஷாவை
நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறார்.
மூன்று முறை முதல்வராக இருந்த ஒருவர் இப்படி மண்புழு போல நெளிவது…
பரிதாபம் பன்னீரு.