Share via:
தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பதவி ஏற்றதும், அண்ணாமலையிடம்
செருப்பைக் கொடுத்து போடுமாறு அன்புக்கட்டளை போட்டார். வேறு வழியின்றி அண்ணாமலையும்
அதை அணிந்துகொண்டு தமிழ்நாட்டை விட்டு எஸ்கேப் ஆனார். இமயமலைக்குப் போயிருக்கும் அண்ணாமலை
அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிவருகிறார்.
இந்த நிலையில் அண்ணாமலை தன்னுடைய ஆதரவாளர்களுக்கு ஒரு பதிவு போட்டார்.
அதில், ‘’என்னைப் போன்று சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு
வருகிறார்கள். நான் மாநிலத்தலைவரின் அன்பு
அறிவுறுத்தலை ஏற்று, தமிழகத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில், நமது தேசிய ஜனநாயகக்
கூட்டணி, திமுக ஆட்சியை நிச்சயம் அகற்றும் என்ற உறுதியுடன், காலணி அணியத் தொடங்கியிருக்கிறேன்.
என்னுடன் விரதம் மேற்கொண்டு வந்த சகோதர சகோதரிகளும் மாநிலத்தலைவரின் அன்பு அறிவுறுத்தலை
ஏற்று தங்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.
நயினார் நியமிக்கப்பட்ட
நேரத்தில் அமித்ஷா, ‘அண்ணாமலையின் பணிகள் பாராட்டுக்குரியது.
அவருக்கு கட்சி மேலிடம் தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கும்’ என்று தெரிவித்தார். ஆனால், அண்ணாமலைக்கு பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர்
பதவி மட்டுமே வழங்கப்பட்டது. அதுவும் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 39 தேசிய பொதுக்குழு
உறுப்பினர்களில் அண்ணாமலையும் ஒருவர் என்ற அளவில் தான் அவருக்கு பதவி வழங்கப்பட்டது.
இதனால், கடும் அதிருப்தியில் இருந்த அண்ணாமலை
சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து
உத்தரகாண்ட் புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து இயமலைக்கு சென்றுவிட்டார்.
உருப்படியான பதவி கொடுத்தால் மட்டுமே திரும்பிவருவேன் என்று பிடிவாதம் காட்டி வருகிறாராம்.
பா.ஜ.க. மதிக்குமா அல்லது அப்படியே கழட்டிவிடுமா என்று விரைவில் தெரிந்துவிடும்.