News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

எடப்பாடியை முதல்வர் பதவிக்கு வரவைப்பதற்கு நான் வரலைங்கண்ணா… எனக்கு பாஜகதான் முக்கியம் என்றெல்லாம் வீரவசனம் பேசிய அண்ணாமலை நிலவரம் இப்போது ரொம்ப ரொம்ப கேவலமாகிவிட்டது. எடப்பாடியை முதல்வராக்குவோம் என்று பேசிய வீடியோவைக் கேட்டு அவரது ஆதரவாளர்கள் அதிர்ந்து நிற்கிறார்கள்.

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசினார். அப்போது அதிமுக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக பாஜகவினர் கடுமையாக உழைப்போம் என்று பேசியிருக்கிறார். இப்போதுதான் அண்ணாமலைக்கு புத்தி வந்திருக்கிறது என்று பாஜகவினர் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கும் நிலை வரும் என்றால் தனிக் கட்சி தொடங்கிவிடுவார் என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் வீராவேசம் பேசி வந்தனர். அத்தனை பேரும் இப்போது கப்சிப் மோடுக்குப் போயிருக்கிறது. சிங்கம் மாதிரி இருந்தாரை பல்லு போன பாம்பா மாத்திட்டாங்க. அமித்ஷா உத்தரவு காரணமாகவே இப்படி பேசினார் என்கிறார்கள்.

அதேநேரம் இது குறித்து பேசும் அதிமுகவினர், ‘’எடப்பாடியார் தான் ஒரு ஆளுமை என்பதை உணர்த்திவிட்டார். அண்ணாமலை வாயால் எடப்பாடியார் முதல்வர் என்று பேச வைத்துவிட்டார்

அடுத்து அதிமுக கட்சி சார்பாக அனைத்து திமுக எதிர்ப்பு கட்சிகளையும்,சிறு சிறு அமைப்புகளையும், விவசாய சங்கங்கள்,தொழிற்சங்கங்கள்,அரசு ஊழியர்கள் இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஆளும் திமுக கட்சிக்கு எதிராக அதிமுக கட்சி ஒருங்கிணைக்க வேண்டும்.அதற்காக முன்னாள் அதிமுக கட்சி அமைச்சர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்த வேண்டும்.

அதேப் போல் அமமுக கட்சி தினகரனை கூட்டணிக்கு கொண்டு வந்து அவரையும் இனி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில்,தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை,மற்றும் சிறு சிறு கூட்டணி கட்சி தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் ஒரு பிரம்மாண்ட மாநாட்டை நடத்தி ஓரே மேடையில் தோன்ற வேண்டும். அதற்கடுத்து பாஜக தலைவர்களும் தங்கள் சுற்றுப்பயணத்தை தொடங்க வேண்டும்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சுற்றுப்பயணத்தில் தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கும் மக்கள் எழுச்சி கூட்டம் கண்டிப்பாக ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்ப்பதை உறுதி செய்கிறது.இதற்கு பிறகு கூட்டணிக்குள் ஈகோ பார்க்காமல் பழைய பகையை மறந்து அனைத்து தலைவர்கள் ஒன்றிணைந்து களத்தில் உழைக்க சரியான காலம் சூழ்நிலையை பயன்படுத்தி மக்களிடம் மாற்று சக்தியாக ஒற்றுமையுடன் நம்பிக்கையை ஏற்படுத்தினால் அதிமுக வெற்றி பெற்றுவிடும்’’ என்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link