Share via:
கருணாநிதி உயிருடன்
இருந்த நேரத்தில் தி.மு.க.வில் இணைந்து கலைச் சேவையுடன் அரசியல் பயணத்தைத் தொடங்கியவர்
நடிகை குஷ்பு. அவர் சேர்ந்ததும் தி.மு.க. தோற்றுப்போனது. அதன் பிறகு ஸ்டாலின் நெருக்கடியைத்
தாக்குப்பிடிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சிக்குப் போனார். அந்த கட்சியும் தோற்றுப்போனதும்
பா.ஜ.க.வுக்குப் போனார்.
பா.ஜ.க.வில் அவருக்கு
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைமைப் பதவி கொடுக்கப்பட்டது. அதில் அவரது கல்வித்தகுதி பிரச்னையானதால்
பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்
அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதையடுத்து அமைதியாக ஒதுங்கியே
இருந்தார் குஷ்பு.
இந்த நிலையில்,
‘’பா.ஜ.க.வில் என்னை புறக்கணிக்கிறார்கள். அண்ணாமலை என்னை அழைப்பதே இல்லை. அதனால் தான்
பா.ஜ.க. நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கவில்லை’ என்று குஷ்பு பேசிய ஆடியோ வெளியானது.
இதற்கு பதில் அளித்த
அண்ணாமலை, ‘யாரையும் கூப்பிடுறது என் வேலை இல்லீங்கண்ணா. அது கட்சியில் கேசவவிநாயகத்தைக்
கேட்கணும்’’ என்று நைசாக நழுவிக்கொண்டார். இப்போது பா.ஜ.க.வில் குஷ்புக்குக் குரல்
கொடுக்க யாருமே இல்லை என்பதுடன் அண்ணாமலை ஆர்மி குஷ்புவை போட்டு விரட்டிவிரட்டி அடிக்கிறார்கள்.
குஷ்புவின் மகள் குடித்துவிட்டு ஆடிய போட்டோவை எல்லாம் ரிலீஸ் செய்கிறார்கள்.
அதோடு பா.ஜ.க.வினர்,
‘’குஷ்பு பா.ஜ.க.வுக்கு எந்த வேலையும் செய்யாமல் பெரிய பதவி எதிர்பார்க்கிறார். அதற்கு
வாய்ப்பே இல்லை என்பதால் விஜய் கட்சியில் சேரும் முடிவுக்கு வந்துவிட்டார். அதனாலே
அண்ணாமலைக்கு எதிராகப் பேசுகிறார்’’ என்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் ஆடியோல்,
வீடியோ வெளிவரவும் வாய்ப்பு இருக்கிறது.
அதனாலோ என்னவோ குஷ்பு
இப்போது பதற்றத்துடன், ‘’பா.ஜ.க. என்னை புறக்கணிக்கிறது என்று சொல்லவில்லை, அழைக்கவில்லை
என்று தான் சொன்னேன்’’ என்று விளக்கம் கொடுத்துவருகிறார்.
பூவை பூவுன்னு சொன்னாலும்
புஷ்பம்னு சொன்னாலும் ஒரே அர்த்தம்தானே மேடம்.