News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்துக்கான மூலப்பொருட்கள் பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி செய்யும் பாண்டிச்சேரியிலிருந்து தான் தமிழகத்திற்கு வந்திருக்கிறது. ஆகவே, இது தி.மு.க.வின் 40க்கு 40 வெற்றி ஏற்படுத்திய எரிச்சலில் எதிர்க் கட்சிகள் செய்த சதியாக இருக்கலாம் என்று தி.மு.க. தலைவர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில்,  கள்ளச் சாராய விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய விவகாரத்தில் அண்ணாமலையின் சதி இருக்குமோ என்று சந்தேகப்படுவதாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசும்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு நஷ்டஈடு கேட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ், ஆர்.எஸ்.பாரதிக்கு அனுப்பியுள்ள நோட்டீ
ஸில், ‘உண்மைக்கு புறம்பான, தவறான கருத்துகளை கூறி, மக்கள் மத்தியில் அண்ணாமலையின் கண்ணியத்தை குலைக்கும் வகையிலும், களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அவதூறு கருத்துகளை ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். எனவே அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்த நோட்டீஸ் பெற்ற 3 நாட்களில் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் போதை மறுவாழ்வு மையம் அமைக்க ரூ.1 கோடியை மான நஷ்டஈடாக வழங்க வேண்டும்.’’ என்று கேட்டிருக்கிறார்.

நோட்டீஸ் அனுப்புவாரு ஆனா கேஸ் போட மாட்டாரு அது தான் அண்ணாமலை என்கிறார்கள். பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link