Share via:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு
ஓ.பன்னீர்செல்வம் மட்டும் வாழ்த்துச் சொல்லி, ‘இன்று வெற்றி பெறுவார்’ என்று ஆருடம்
கூறியிருக்கிறார்.
ஆனால், காலை 9 மணி நிலவரப்படி அண்ணாமலையை விட கண்பதி ராஜ்குமாரே
தொடர்ந்து முன்னிலையில் நீடிக்கிறார். இங்கு மட்டுமின்றி தமிழகம் முழுக்கவே பா.ஜ.க.
கூட்டணி பின் தங்கியே இருக்கிறது.
நெல்லையில் நயினார் நாகேந்திரனும் தர்மபுரியில் செளமியா அன்புமணியும்
சற்று நேரம் முன்னிலையில் வகித்தாலும் மீண்டும் தி.மு.க. வேட்பாளர் அதை தாண்டியிருக்கிறார்.
எல்லோரும் கதிர் ஆனந்த் சிக்கலில் மாற்றிக்கொள்வார் என்று எதிர்பார்த்தாலும்
தொடர்ந்து கதிர் ஆனந்த் முன்னிலையில் நீடிக்கிறார். நீலகிரியில் தொடர்ந்து ஆ.ராசாவே
முன்னிலையில் இருக்கிறார்.
கோவையில் மட்டும் அண்ணாமலை நிச்சயம் ஜெயித்துவிடுவார் என்று தமிழகம்
முழுக்க எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐந்தாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று கணபதி முதல்
இடத்தில் இருக்கிறார். இன்னும் சில மணி நேரங்களில் இந்த வாக்கு வித்தியாசம் மேலும்
அதிகமாகும் என்கிறார்கள்.
புதுவையில் காங்கிரஸ் கட்சியின் வைத்தியலிங்கம் மிக அதிக வாக்கு
வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
அதேநேரம், அகில இந்திய அளவில் மோடியின் கூட்டணி 301 தொகுதிகளிலும்
ராகுலின் இந்தியா கூட்டணி 190 இடங்களிலும் முன்னிலை நிலவரத்தில் உள்ளன.