Share via:
கார்த்திகை செல்வன் எடுத்த ஒரு பேட்டி குறித்து ’பல்லுபடாம…’
என்று சாதாரண நபர்கள் பேசுவதற்குக் கூசும் வார்த்தைகளை சகஜமாகப் பயன்படுத்தினார் தமிழக
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இதற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பிய நேரத்தில், இதெல்லாம்
கொங்கு பகுதியில் சாதாரணம் என்றும் இதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் பேசியிருந்தார்
அண்ணாமலை.
தேசியக் கட்சியின் தலைவராக இருக்கும் ஒருவர் அருவருக்கத்தக்க
பேச்சை வெளிப்படுத்தியதைக் கண்டித்து மூத்த பத்திரிகையாளர்கள் ராம், குணசேகரன், அரவிந்தாக்ஷன்,
ஏ.எஸ்.பன்னீர்செல்வன், திருஞானம், கவிதா முரளீதரன் போன்ற ஒவ்வொரு நபரும் தி.மு.க.வுக்கு
ஆதரவாகவும் பா.ஜ.க.வுக்கு எதிராகவும் குரல் எழுப்பிய தருணங்களை வீடியோவாக்கிப் போட்டிருக்கிறார்.
அதோடு அவர் எக்ஸ் தளத்தில், எனக்கு எதிராகக் களமிறக்கப்பட்டுள்ள,
திமுக என்ற வெங்காயத்தின் முதல் அடுக்கு என்று பரவலாக அறியப்பட்டவர்கள், இன்றைய தினம்
ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை அறிகிறேன். இன்றைய ஆர்ப்பாட்டம்,
கடந்த ஒரு ஆண்டில் மட்டும், எனக்கு எதிராக இந்தக் கும்பலால் நடத்தப்படும் மூன்றாவது
ஆர்ப்பாட்டமாகும். இதனை நான் பெருமையாகவே கருதுகிறேன்.
தாங்கள் ஒரு பத்திரிகையாளர் என்பதை மறந்துவிட்டு, திமுகவின்
செய்தித் தொடர்பாளர் போல் நடந்து கொள்ளும்,
வெங்காயத்தின் முதல் அடுக்கான இவர்களின் உண்மை நிலைப்பாடு குறித்த சில எடுத்துக்காட்டுகள்
என்று ஹிண்டு ராம்,
பத்திரிக்கையாளர்கள் வேஷம் போட்ட இந்த சில திமுக அடிவருடிகளால்,
இனியும் தமிழ்நாட்டு அரசியலின் போக்கை முடிவு செய்யவோ, கட்டுப்படுத்தவோ முடியாது.
தங்கள் உயிரைப் பணயம் வைத்து, மக்கள் பிரச்சினைகளை வெளிக் கொண்டு
வரும் பத்திரிகையாளர்களுடன் தோளோடு தோள் நிற்கிறேன். அதே நேரத்தில், ஆளும் திமுக அரசை
மகிழ்விக்கும் பிரச்சார இயந்திரமாகச் செயல்படுபவர்களை நான் வெறுக்கிறேன். அவர்கள் ஜனநாயகத்தின்
நான்காவது தூணான ஊடகத் துறைக்கே அவமானம் என்று கூறியிருக்கிறார்.
பத்திரிகையாளர்கள் ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ப அதனை விமர்சனம்
செய்வது வழக்கம். இந்த பத்திரிகையாளர்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக அவதூறு செய்திருக்கும்
அண்ணாமலை மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதுதான் தமிழக மூத்த பத்திரிகையாளர்களின்
கேள்வி.