Share via:
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு என்று தனிப்பெருமை இருக்கிறது. ஆனால்,
ஊழியர்களுக்கு பிராவிடண்ட் ஃபண்ட் கட்ட முடியாத அளவுக்கு நிதிச்சிக்கலில் மாட்டியிருப்பதால்
திவால் ஆகிவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘தங்களுடைய நிதி நிலைமை சரியில்ல
அதனால் ஆசிரியர்களுக்கு கட்ட வேண்டிய பிராவிடண்ட் ஃபண்ட் தொகையை கட்ட முடியவில்லை’
என்று அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறது.
இது குறித்து அண்ணா பல்கலைகழகத்தில் பேசிய வகையில், ‘’முன்பு அண்ணா
பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் நிறைய கல்லூரிகள் இருந்தன. ஆகவே, அந்த கல்லூரிக்கும் தேர்வு
நடத்துவது போன்ற பல்வேறு காரணங்களால் அண்ணா பல்கலைக்கு பணம் கொட்டியது.
இப்போது பெரிய கல்லூரிகள் எல்லாம் நிகர் நிலை பல்கலைகழகங்களாக
மாறிவிட்டன. அது மட்டுமின்றி நிறைய கல்லூரிகள் தன்னாட்சிக் கல்லூரியாக மாறிவிட்டன. இந்த கல்லூரிகளில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு
வந்துகொண்டிருந்த தேர்வுக் கட்டணம் 200 கோடி ரூபாய்க்கு மேல் குறைந்துவிட்டது.
இது தவிர, இப்போது மாணவர் சேர்க்கையிலும் அண்ணா பல்கலைக்கழகத்துக்குக்
கீழ் இருக்கும் கல்லூரிகளுக்கு அத்தனை முக்கியத்துவம் கிடைப்பதில்லை. எல்லா மாணவர்களும்
எஸ்.எஸ்.என்., எஸ்.ஆர்.எம். வி.ஐ.டி. சாஸ்திரா, வேல்ஸ், ஈஸ்வரி என புகழ் பெற்ற கல்லூரிக்குத்தான்
போகிறார்கள். இதுபோன்ற காரணங்களால் அண்ணா பல்கலையின் வருமானம் குறைந்து விட்டது.
அதேநேரம், அண்ணா பல்கலையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் எண்ணிக்கை
குறையவில்லை என்பதால் சம்பளம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆகவே, தேர்வுக் கட்டணம்
போன்ற பல்வேறு கட்டணங்களைக் கூட்டவில்லை என்றால் விரைவில் அண்ணா பல்கலைக்கழகம் திவால்
ஆவதைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள்.