Share via:
வரும் ஜூன் 19ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு
தேர்தல் நடக்கிறது. இதில் யார், யாருக்கு சீட் என்ற ஹேஸ்யங்கள் இறக்கை கட்டிப் பறக்கின்றன.
கமல்ஹாசன் திமுக பக்கத்திலிருந்தும் கெளதமி அ.தி.மு.க. பக்கத்திலிருந்தும் டெல்லி போகிறார்கள்
என்பது ரொம்பவே பரபரப்பாகிறது.
தமிழகத்தில் 18 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடங்கள் உள்ளன. இதில்,
6 எம்.பி.க்களுக்கான இடங்களுக்கு 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் தேர்தல்
நடைபெறுவது வழக்கம். அதன்படி, மதிமுக பொதுச்செயலர் வைகோ, அன்புமணி
ராமதாஸ், திமுக வில்சன், முகமது அப்துல்லா, சண்முகம், அதிமுக சந்திரசேகர் ஆகிய 6 மாநிலங்களவை
எம்.பி.க்களுக்கு வரும் ஜூலை 24-ஆம் தேதி பதவிக்காலம் நிறைவடைகிறது.
இந்த இடங்களுக்கு வரும் ஜூன் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், 6 வேட்பாளர்களுக்கு மேல் நிறுத்தப்பட்டால்
வாக்குப்பதிவு நடைபெறும். இல்லையெனில் 6 வேட்பாளர்களும் வெற்றி பெற்றதாக ஒரு மனதாக
அறிவிக்கப்படும். இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படாது
என்றும் அந்த இடம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்குக் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
வில்சனுக்கும் சீட் உறுதி. மீதமுள்ள இடங்களில் ஒரு முஸ்லீம் மற்றும் ஒரு பத்திரிகையாளர்
திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதேபோல, அதிமுக
சார்பில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று அந்த கட்சியின்
பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி வரும் நிலையில் அது நிறைவேற வாய்ப்பு
இல்லை என்றே சொல்லப்படுகிறது. அதேநேரம் மீண்டும் அன்புமணிக்கு எம்.பி. பதவி வேண்டும்
என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் இரண்டு ராஜ்யசபா எம்.பி. சீட்டும் அதிமுகவுக்கு
என்றே எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறார். ஆனால், தேர்தல் நடத்தாமல் இரண்டாவது
எம்.பி. சீட் பெற வேண்டும் என்றால் பாஜக மற்றும் பாஜக உதவி வேண்டும். எனவே, ஒரு சீட்
அன்புமணிக்குக் கொடுக்கலாம் என்ற பேச்சு எழுகிறது. அதேநேரம், கெளதமி அல்லது விந்தியாவுக்கு
ஒரு சீட் கொடுக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
இந்த வாரம் முடிவு தெரிந்துவிடும்.