News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தைலாபுரத்தில் கடந்த ஜூன் 24ம் தேதி மாலை நடைபெற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் – சரஸ்வதியின் 60-வது திருமண நாள் நிகழ்ச்சி நடைபெற்றது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ராமதாஸ் – சுசிலா 50வது திருமண நாள் நிகழ்வு குறித்து ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் பின்னணியில் அன்புமணி இருப்பதாக கூறப்படுகிறது. .

பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணி இருவரும் கட்சியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ராமதாஸ் – சரஸ்வதியின் 60-வது திருமண நாள் நிகழ்ச்சியில் இந்த சண்டை முடிவுக்கு வரும் என்று கூறப்பட்டது. ஆனால், இந்நிகழ்வில் ராமதாஸின் மகள்கள் காந்தி – பரசுராமன் மற்றும் கவிதா – கணேஷ் குடும்பத்தினர், பேரன், பேத்திகள், கொள்ளுபேரன்கள், கொள்ளு பேத்திகள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். அன்புமணி – சவுமியா குடும்பத்தினர் புறக்கணித்தனர்.

இந்நிலையில் அன்புமணி பிரச்னைக்கு மூலகாரணமாக சொல்லப்படும் சுசிலாவுடன் ஆகஸ்ட் 24ம் தேதி 50வது திருமண நாள் கொண்டாட்டம் நடைபெற்றதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் பாமகவின் அத்தனை தொண்டர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

பெரிய அய்யாவுக்கு ரெண்டு பொண்டாட்டியா..? இதுவரை வெளியான செய்திகள் எல்லாமே உண்மையா..? என்றெல்லாம் எக்கச்சக்க கேள்விகள் வெளியாகின்றன. அதோடு இதையெல்லாம் அன்புமணி வெளியிட வேண்டுமா என்றும் கேட்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link