இலங்கை தேர்தலில் தற்போதைய நிலவரப்படி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அநுர குமார திசநாயக்க அதிக வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார். மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. இந்திய அரசு தனது இலங்கைக் கொள்கையை அதானியின் வணிக நலனை மட்டும் முன்னிறுத்தி அரசியல் செய்யக்கூடாது என்று எதிர்க்குரல் எழுப்பிவருகிறார்கள்.

ஏனென்றால் மோடியின் ஆதரவு பெற்ற ராஜபக்‌ஷே மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். மக்கள் நலனையும் மக்களின் எதிர்காலத்தையும் புரிந்துகொள்ளாமல் அரசாட்சி செய்பவர்களுக்கு இந்த கதியே ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது.

இலங்கை மக்கள் தெளிவான முடிவு அளித்திருக்கிறார்கள். அதாவது நெருக்கடியான பொருளாதார சூழலில் இருந்து நாட்டையும் தங்கள் குடும்ப பொருளாதாரத்தையுமா பாதுகாத்துக் கொள்ள மக்கள் கம்யூனிஸ்ட்களை தான் தேர்வு செய்திருக்கிறார்கள். சமீபத்தில் பிரான்ஸ் நாட்டிலும் இப்படியொரு மாற்றம் நிகழ்ந்தது.

அதேநேரம், வன்னி, முல்லைத்தீவு, ஜாப்னா உள்ளிட்ட பல தமிழர் பகுதிகளில் அநுர குமார திசநாயக்க கடைசி இடத்திலேயே இருக்கிறார். இந்த மூலம் தமிழர்கள் இந்த அதிபரை ஏற்கவில்லை என்பது தெளிவாகிறது. தேசிய நீரோட்டத்தில் கலக்காத வரையிலும் தமிழர்களுக்கு அங்கு சிக்கல் நீடிக்கவே செய்யும். புதிய ஆட்சியில் இந்திய உறவு எந்த அளவுக்கு இருக்கும், மீனவர்கள் நிலை என்னவாகும் என்பதெல்லாம் கடும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link