News

விஜய்க்கும் சீமானுக்கும் டஃப் போட்டி.? உறுதியாகும் நான்குமுனைப் போட்டி

Follow Us

கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் அவரது ஈஷா யோகா மையத்தில் ஒவ்வோர் ஆண்டும் மகா சிவராத்திரி விழாவில் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார். இந்திய ஜனாதிபதி, பிரதமர் மோடி என்று திட்டமிட்டு மிகப்பெரிய விஐபிகளை அழைத்துவ்ருவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை ஸ்பெஷல் வி.ஐ.பி.யாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.

அவர்களுடன் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவகுமார், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. முக்கியப் புள்ளி எஸ்.பி வேலுமணி மற்றும் பிரபல சினிமா கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

ஆன்மிக விழா என்றாலும் இதை அரசியல் மேடையாக மாற்றினார் ஜக்கி வாசுதேவ். இந்த மேடையில், ‘’இந்த தேசத்தை கட்டமைப்பதில் சர்தார் வல்லபாய் பட்டேல் மிகவும் பாடுபட்டார். அவருக்குப் பிறகு மிகவும் பலம் வாய்ந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாஜி அவர்கள் தான். 10 ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்தில் மாதம் தவறாமல் தேசத்தில் ஒவ்வொரு பகுதிகளும் குண்டு வெடிப்பு நடந்தது. தற்போது நாடு அமைதியாக இருக்க பாடுபட்ட அனைத்து ஏஜென்சிகள் உள்துறை அமைச்சருக்கும் நன்றி’’ என்று தன்னுடைய அரசியலைத் தொடங்கிவைத்தார்.

காங்கிரஸ் ஆட்சி பற்றி ஜக்கி வாசுதேவ் மோசமாக விமர்சனம் செய்தபோதும், அதற்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக இருந்தார் கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார். இவருக்கு எப்படி காங்கிரஸ் கட்சியினர் மதிப்பு கொடுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

அதோடு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, எல்.முருகன் மற்றும் வேலுமணி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். பின்னர் அமித்ஷாவும் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் சிவராத்திரியில் அமித்ஷாவுக்கு தேர்தல் பிரசாரமே நடந்திருக்கிறது என்று திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதேபோல் சிவராத்திரி என்ற பெயரில் நடந்த கொள்ளையையும் சிலர் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

சிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதற்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டது என்றாலும் கங்கா. 50,000 யமுனா 20,000 நர்மதா. 5,000 கோதாவரி 1,000 காவிரி. . 500 என சிவராத்திரி ஈஷா யோகா விழாவிற்கு பக்தர்களுக்கான இருக்கைகளுக்கான கட்டணம் வசூல் செய்யப்பட்டது. 50 ஆயிரம் என்றால் அருகில் நின்று பார்க்கலாம். 500 ரூபாய் என்றால் வெகு தூரத்தில் இருந்து பார்க்கலாம். இலவச அனுமதி என்று வந்தவர்கள் கட்டங்கடைசியில் நின்று பார்க்க வேண்டியது தான். இந்த வகையில் வசூல் கோடிகளில் நடந்திருக்கிறது

இந்த நிகழ்ச்சியில் ஹைலைட் செருப்புக் காலுடன் சிவன் சிலைக்கு முன்பு டான்ஸ் ஆடியது தான். இதையெல்லாம் இந்து முன்னணியினர் கண்டுகொள்வார்களா என்ன..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link