Share via:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விரும்பத்தகாத
பல நிகழ்வுகள் கட்சிகள் அரங்கேறி வருகின்றன. அமித்ஷாவை சந்தித்து வந்தவர் கூட்டணி குறித்து
இப்போது பேசவில்லை என்று அறிவித்தார். ஆனால், அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை
நடக்கிறது என்று அமித்ஷா அறிவித்துவிட்டார்.
இதே காலகட்டத்தில் செங்கோட்டையன் டெல்லிக்குச் சென்று அமித்ஷா,
நிர்மலா சீதாராமனை சந்திக்கிறார். எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து வெளியேற வேண்டிய
சூழல் உருவாகும் என்று பன்னீர்செல்வம் எச்சரிக்கிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
என்ன செய்யப்போகிறார் என்று அவரது ஆதரவாளர்களிடம் பேசினோம்.
‘’செங்கோட்டையன் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் உள்துறை
அமைச்சர் அமித்ஷாவை அதிமுக கட்சி தலைமையின் உத்தரவில் சந்தித்திருந்தால் எந்தப் பிரச்சனையும்
இல்லை.ஆனால் அதே அதிமுக தலைமையின் அனுமதி இல்லாமல் சந்தித்திருக்கிறார். ஆகவே, உடனடியாக
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏக்நாத் ஷிண்டேவாக செங்கோட்டையனை மாற்றுவதற்கு பா.ஜ.க.
முயற்சி செய்வது அப்பட்டமாகத் தெரிகிறது. எனவே, செங்கோட்டையன் மீது நட்டவடிக்கை எடுக்க
வேண்டியது அவசியம். தனி நபர்களை விட கட்சியே முக்கியமானது.
அதேநேரம் கூட்டணியும் முக்கியம். கடைசி நேரத்தில் கூட்டணி என்பது
சரிப்படாது. ஆகவே, இப்போதே விஜய், பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி
முயற்சி செய்ய வேண்டும். இந்த விவகாரங்களை எல்லாம் எடப்பாடி பழனிசாமி புரிந்து வைத்திருக்கிறார்.
ஆனால், விட்டுப்பிடிப்போம் என்று அமைதியாக இருக்கிறார். இப்போது இரண்டம் கட்டத் தலைவர்களை
அனுப்பி செங்கோட்டையனை சமாதானப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறார். இதற்கு செங்கோட்டையன்
ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார். பொதுச்செயலாளருக்கே
எல்லா அதிகாரமும் இருப்பதாக நீதிமன்றம் கூறியிருப்பதால், இரட்டை இலையை பறிக்க முடியாது’’
என்கிறார்கள்.