Share via:
நூலகம் கட்டுவதாக
இருந்தாலும் சரி, பஸ் ஸ்டாண்ட் கட்டுவதாக இருந்தாலும் சரி அதற்கு கலைஞர் கருணாநிதி
பெயரை சூட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது ஆளும் தி.மு.க. அரசு.
இந்த நிலையில் மதுரையில்
தொடங்கப்படும் ஏறு தழுவுதல் அரங்கிற்கு கலைஞர் பெயரை சூட்டக்கூடாது என்று எதிர்க்கட்சிகள்
நிறையவே அழுத்தம் கொடுத்துவந்தனர். ஆனால், அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் அட்டகாசமாக
திறப்புவிழா நடத்தி ஏழு தழுவுதலை தொடங்கி வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உலகின் முதல் பிரம்மாண்டமான
ஏறுதழுவுதல் அரங்கம் என்று இதனை சொல்லலாம். ஏனென்றால், தமிழகம் மட்டுமின்றி வேறு எங்கும்
இதற்கென்று அரங்கம் உருவாக்கப்பட்டதில்லை. ஆகவே, 62.78 கோடி ரூபாய் செலவில் மதுரை அலங்காநல்லூர்
கீழக்கரை கிராமத்தில் கம்பீரத் தோற்றத்துடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல்
அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்திருக்கிறார்.
கலைஞருக்கும் ஏறு
தழுவுதலுக்கும் என்ன சம்பந்தம் என்று எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு, முரசொலியின்
முதல் பக்கத்தில் என்ன இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளது என்பதையும், முரசொலி அலுவலகத்தில்
என்ன சிலை வைக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.