Share via:
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்
உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்றது. சில மாவட்டச் செயலாளர்களை தேர்தல் நேரத்தில்
மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அப்படி எதுவும் நடக்கப்போவதில்லை
என்று தெரிந்துவிட்டது.
இன்று கூட்டத்தில் பேசிய எடப்பாடி, ‘’நமது மாவட்டச் செயலாளர்கள்
மற்றும் நிர்வாகிகளுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம்
பேசித் தீர்த்துகொண்டு ஒற்றுமையாக லோக்சபா தேர்தல் பணிகளை கவனியுங்கள்.
யாரையெல்லாம் வேட்பாளராக நிறுத்தலாம் என்று பெயர் பட்டியலை இப்போதே
எனக்கு அனைவரும் அனுப்பிவையுங்கள். கூட்டணி குறித்து அறிந்துகொள்ள எல்லோரும் ஆர்வமாக
இருக்கிறீர்கள். அதை பற்றி நான் பார்த்துக் கொள்கிறேன். ஆகவே, நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
தேர்தலுக்கு செலவழிப்பதற்கு அச்சப்படாத வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள்’’ என்று
கூறியிருக்கிறார்.
மாவட்டச் செயலாளர்கள் வேட்பாளர்களைத் தேர்வு செய்தால் அவர்களே
பணம் செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதாலே இதுவரை யாரும் பட்டியல் அனுப்பவில்லையாம்,
இனியும் அனுப்ப மாட்டார்களாம். கூட்டணியும் கிடையாது, பணமும் கிடையாது, மாற்றமும் கிடையாதுன்னா
என்னாத்துக்கு இந்த மீட்டிங் என்று புலம்பியபடியே நிர்வாகிகள் கிளம்பிச் சென்றுள்ளார்கள்.