News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஏ.ஐ.பி.இ.ஏ. அறிவித்துள்ளது.

வங்கிகளில் அதிக ஊழியர்களை நியமிக்கக் கோரி நேற்று (செப்.27) அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏ.ஐ.பி.இ.ஏ.) நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அந்த அழைப்பில், வருகிற டிசம்பர் மாதம் 4ம் தேதி முதல் 11ம் தேதி வரையில் அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பொது மக்கள் வங்கி பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள அவதிப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி முதல் 6ம் தேதிவரை பல்வேறு மாநிலங்களில் வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும், ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய 2 நாட்களிலும் அகில இந்திய அளவிலான வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதத்தில் முதல் வாரத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள சிக்கலை சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link