Share via:
சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கப்பட்டுள்ளதையடுத்து பட்டாசுகளை வாங்க பொது மக்கள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 12ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடையும் பட்டாசும் தானே? இதனால் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நேற்று முதல் (அக்.29) தொடங்கப்பட்டுள்ளது. இந்த பட்டாசு விற்பனை வருகிற நவம்பர் 12ம் தேதி வரையில் 15 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.
அதன்படி தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள 55 கடைகளில் பல்வேறு வகையிலான பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பான மற்றும் தரமான விற்பனை குறித்த அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சிறப்பாக மேற்கொண்டுள்ளது. ஆண்டுதோறும் சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பட்டாசு விற்பனைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.