Share via:
சென்னையைப் புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலில் தி.மு.க.வினர் முந்தைய ஜெயலலிதா போன்று செயல்படவில்லை என்று விமர்சனம் செய்த பத்திரிகையாளர்களை தி.மு.க. ஆதரவு உடன்பிறப்புகள் புரட்டிபுரட்டி அடித்துவருகிறார்கள்.
மழை வெள்ளப் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், பல்வேறு பத்திரிகையாளர்களும், மீடியாக்காரர்களும் தி.மு.க. அரசை குறைகூறத் தொடங்கினார்கள். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், மேயர் ஆகியோர் பம்பரமாக சுழன்றபோதும், தி.மு.க.வை விமர்சனம் செய்பவர்களை எல்லாமே எதிரிகள் என்ற கண்ணோட்டத்தில் தி.மு.க. ஆதரவாளர்கள் விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டனர்.
இதையடுத்து நியூஸ் மினிட் தன்யா ராஜேந்திரன், ஷபீர் அகமது இருவரும் கருணாநிதியை மிகவும் ஆபாசமாக முன்பு பேசியிருக்கிறார்கள் என்று ஆதாரங்களைப் போட்டு அடிக்கத் தொடங்கினார்கள். ஷபீருக்கு தி.மு.க.வின் தலைவர்களில் ஒருவரான ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதி எச்சரிக்கை விடுத்தது பெரிய பஞ்சாயத்தாக மாறியது. இந்த விவகாரத்தில் டி.ஆர்.பி.ராஜா இறங்கிவந்து தன்யாவிடம் மன்னிப்பு கேட்டு பஞ்சாயத்தை முடித்துவைத்தார். ஆனாலும், தி.மு.க. ஆதரவு இணையதளவாசிகள் இருவரையும் விடாமல் புரட்டி புரட்டி சமூகவலைதளங்களில் அடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கனிமொழியின் ஆதரவாளர் என்று கருதப்படும் மீடியாக்காரர் ஆவுடையப்பனின் இரட்டை வேடம் என்று தி.மு.க. ஆதரவாளர்கள் களம் இறங்கி விமர்சனம் செய்கிறார்கள். இவர் முன்பு கருணாநிதியையும், கனிமொழியையும் எப்படியெல்லாம் கொச்சையாகத் திட்டியிருக்கிறார், ஜெயலலிதாவை எப்படியெல்லாம் பாராட்டியிருக்கிறார் என்று அவரது ஒட்டுமொத்த பழைய ட்வீட்களையும் பொதுவெளியில் வெளியிட்டு வருகிறார்கள்.
கனிமொழியுடன் விருந்து சாப்பிட்டுவிட்டு இப்படி துரோகம் செய்யலாமா என்றும், புரோக்கர் பசங்க என்றும் இப்போது ஆவுடையப்பனுக்கு எதிராக ட்வீட் போட்டு வருகிறார்கள்.
தி.மு.க.வினரின் திடீர் அதிரடியைப் பார்த்து நடுநிலை பத்திரிகையாளர்கள் அத்தனை பேரும் அதிர்ந்து நிற்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் அந்தந்த அரசியல் சூழலுக்கு ஏற்ப பத்திரிகையாளர்கள் விமர்சனம் செய்வது வழக்கம். பழைய விவகாரங்களை எடுத்து எல்லாம் எடுத்துப் போட்டு சங்கீ என்றும் அம்மாவின் அடிமை என்றும் திட்டமிட்டு அடையாளம் காட்டுவது தி.மு.க.வுக்குத்தான் சிக்கலாக முடியப்போகிறது என்கிறார்கள்.
எல்லை மீறிப் போறீங்களேப்பா…