Share via:
நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பதற்கு எனக்கு விருப்பமே இல்லை, ஆனாலும்
என்னை நிறுத்தியிருக்கிறார்கள் என்று கூறிவரும் அண்ணாமலைக்கு ஆப்பு ரெடியாக இருக்கிறது
என்று பா.ஜ.க.வின் சீனியர்கள் குஷியாகி இருக்கிறார்கள்.
தன்னுடைய தலைமையில் தமிழகத்தில் பா.ஜ.க. அமோக வளர்ச்சி அடைந்துவிட்டது
என்று தொடர்ந்து பேசி வருகிறார் அண்ணாமலை. இதனை உண்மை என்று நிரூபித்துக் காட்டும்
வகையிலே அவரை கோவையில் வேட்பாளராக பா.ஜ.க. தலைமை நிறுத்தியிருக்கிறது.
இந்த தேர்தலில் நிற்பதற்கு விருப்பம் இல்லை என்றாலும் நிற்க வேண்டிய
சூழலுக்கு ஆளாகிவிட்டார். கோவை தேர்தல் களத்தில் நுழைந்திருக்கும் அண்ணாமலை, ‘இந்த
தேர்தலில் நான் ஒரு பைசா கூட வாக்காளர்களுக்குத் தர மாட்டேன்…’ என்று கூறியிருக்கிறார்.
அதேநேரம், வேலுமணியும் தி.மு.க.வின் வேட்பாளரும் இப்போதே வாக்காளர்களை
எப்படியெல்லாம் கவர் செய்யலாம் என்று தீவிரமாக யோசித்து வருகிறார்கள். வாக்காளர்களுக்குப்
பணம் தரவில்லை என்பதால் தோல்வி என்று அண்ணாமலை சொல்வதற்கு இருக்கிறாராம்.
மேலும், இந்த தேர்தலில் எங்கும் பா.ஜ.க. ஜெயிக்காது என்பதும் அண்ணாமலைக்குத்
தெரியவந்திருக்கிறது. ஆகவே, தேர்தல் முடிந்ததும் தோல்விக்குப் பொறுப்பேற்று அண்ணாமலை பதவி விலகுவாராம். அதன்பிறகு
தமிழிசை செளந்தர்ராஜன் பொறுப்பு ஏற்க இருக்கிறாராம்.
தமிழிசைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் நல்ல புரிதல் இருப்பதால்
2026 தேர்தலில் அனைவரும் ஒன்றாக இணைந்து நின்று தேர்தலை சந்திப்பார்கள் என்று பா.ஜ.க.
சீனியர்கள் சொல்லிவருகிறார்கள்.