Share via:
அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் தற்போது ரூ.3,100ல் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி இந்த பங்குகள் இன்று (ஆகஸ்ட்.12) 2.75 சதவீதமாக அதாவது ரூ.87.55 ஆக சரிவை சந்தித்துள்ளது.
அதன்படி அதானி போர்ட்ஸ் பங்குகள் இன்று 3.20% அல்லது கிட்டத்தட்ட 49 சதவீத சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ரூ.1,484ஆக வர்த்தமாகி வருகிறது.
மேலும் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 4.33 சதவீதம் அல்லது கிட்டத்தட்ட ரூ.77 ஆக சரிவை சந்தித்துள்ள நிலையில் தற்போது ரூ.1,703 ஆக வர்த்தமாகி வருகிறது.
மேலும் அதானி டோட்டல் கேஸ் ஆகஸ்டு 12 (இன்று) நிலவரப்படி 6.97 சதவீதம் அதாவது ரூ.60க்கும் மேல் சரிவை சந்தித்து ரூ.809 ஆக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 4.30 சசதவீதம் அதாவது 47.50 சரிவை சந்தித்து ரூ.1,056 ஆக வர்த்தமாகி வருகிறது. அதானி பவர் பங்குகளும் 5.91 சதவீதம் அதாவது கிட்டத்தட்ட 41 ரூபாய் வரை சரிவை சந்தித்து ரூ.654 ஆக வர்த்தகமாகி வருகிறது.
அதானி வில்மர் பங்குகளை பொறுத்தவரையில் 4.30 சதவீதம் சரிந்து 368 ரூபாய்க்கு பங்குகள் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் இன்றைய நிலவரப்படி 1.44 சதவீதம் குறைந்து அதாவது ரூ.9க்கு மேல சரிந்து ரூ.622க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. ஹிண்டன்பர்க் அறிக்கையானது அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளையும் கணிசமான அளவில் சரிவை ஏற்படுத்தியுள்ளதால் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.