Share via:
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும் என
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள விவகாரம் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட
இந்திய ஏற்றுமதியாளர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியா மீதான வரி விதிப்பு கொள்கையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
ஜூலை மாத இறுதியில் அறிவித்தார். ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த
வேண்டும் என அவர் பகரிங்கமாக அறிவித்தார். அது தொடர்ந்த நிலையில் 25 சதவீத பரஸ்பர வரி
மற்றும் கூடுதலாக 25 சதவீதம் என இந்தியாவுக்கு மொத்தம் 50 சதவீதம் வரி விதித்துள்ளது
அமெரிக்கா.
இதனால் திருப்பூர் உள்ளிட்ட ஈரோடு ஏற்றுமதியாளர்களின் பொருட்கள்
திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. எனவே, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக்
குறைக்க வேண்டும், வரிவிகிதத்தைக் குறைக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்த்துவந்தனர்.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நமது தேவைக்கு
எது சரி என்பதை பார்த்து பல்வேறு பொருட்களை வாங்கி வருகிறோம். இதன் அடிப்படையில்தான்
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல பொருட்களை வாங்குகிறோம்.
இதில் விலை உள்ளிட்ட விவரங்களும் கவனிக்கப்படும்.
கச்சா எண்ணெய் அந்நியச் செலவாணி சார்ந்துள்ள ஒரு பொருள். அதனால்
அதில் நமக்கு பொருத்தமானதை வாங்குகிறோம். அந்த வகையில் பார்த்தால் ரஷ்யாவிடம் இருந்து
நாம் கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும். அதில் சந்தேகம் எதுவும் இல்லை. இந்தியாவின்
இறக்குமதி செலவில் கச்சா எண்ணெயின் பங்கு மிக அதிகம்” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் இறக்குமதியில் அதானி மட்டுமே அதிகம் சம்பாதிக்கிறார்,
இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் இதில் எந்த ஆதாயமும் இல்லை என்ற பிறகும் இந்தியா
பிடிவாதம் பிடிப்பதை நினைத்து ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.