Share via:
நாடாளுமன்றம் கூடியதும்
அதானி மீது விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினார்கள்.
உடனடியாக அந்த விவகாரத்தை திசை திருப்புவதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல்
செய்தார்கள்.
மக்களவையில் மெஜாரிட்டி
இல்லை, இந்த மசோதா நிறைவேற வழியில்லை என்பது தெரிந்தாலும் வேண்டுமென்றே இதனைக் கொண்டுவந்து
இந்தியா முழுக்க பெரும் பதற்றத்தை உருவாக்கினார்கள். அந்த மசோதா நிறைவேறாமல் நாடாளுமன்றக்
கூட்டுக்குழு விசாரணைக்குச் சென்றது. அதனால் தேவையில்லாமல் அம்பேத்கரைப் பற்றி பேசினார்
அமித்ஷா.
உடனே அம்பேத்கர்
விவகாரத்தில் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தியா முழுக்க பெரிய அதிர்வலை
உருவானது. உடனடியாக இந்த விவகாரத்தை திசை திருப்ப ராகுல் காந்தி மீது அடுக்கடுக்காக
குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. தன்னை ராகுல் காந்தி தள்ளிவிட்டதாக பிரதாப் சாரங்கி
ரத்தம் வழியும் தலையுடன் புகார் சொல்கிறார்.
அடுத்து, ராகுல்
காந்தி தள்ளிவிட்டதாக முகேஷ் ராஜ்புத் எம்.பி. மருத்துவமனை அவசர சிகிச்சைப்
பிரிவுக்கு கொண்டு போகப் படுகிறார். அவரே
இந்த விவகாரம் குறித்து மதியம் 1.30 மணிக்கு
மோடியிடம் ஸ்பீக்கர் போனில் பேசுகிறார்.
பின்பு அவரே 2 மணிக்கு ஆபத்தான நிலையில் அவசரப்
பிரிவில் சேர்க்கப்படுகிறார்.
இவை போதாது என்ற
எண்ணத்தில், ‘’ராகுல் காந்தி என்னை நெருங்கி
வந்தார் அவர். எனக்கு அது
பிடிக்கவில்லை. பின் கத்த ஆரம்பித்துவிட்டார்.
ராகுல் காந்தியால் இன்று மிகவும் அசௌகரியமாக
உணர்ந்தேன்” என்று
பாஜக பெண் எம்.பி. புகார்
கூறுகிறார். இந்த வரிசையில் அடுத்தது ராகுல் காந்தி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறவும்,
அதற்காக அவரை கைது செய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
சாதாரண தலை காயங்களுக்கு
எந்த மருத்துவமனையிலும் ஐசியு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க மாட்டார்கள் என்று மருத்துவர்களே
பொங்குகிறார்கள். இப்படி அதானி ஊழலை மறைக்க பா.ஜ.க. இன்னும் என்னென்ன நாடகம் நடத்தப்போகிறதோ
தெரியவில்லை. இரண்டு நாட்களாக ராகுல்காந்தியை குண்டர் என்று ஹேஸ்டேக்கை பா.ஜ.க.வினர்
வைரலாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.