Share via:
தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
கேப்டனின் மறைவை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா துறையைச் சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர் அவரது நினைவிடத்திலும், சாலி கிராமத்தில் உள்ள கேப்டனின் இல்லத்திலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கேப்டன் மறைந்த போது வெளிநாடுகளில் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டிருந்த பல்வேறு நடிகர்கள் தற்போது நினைவிடத்திற்கும், சாலி கிராமத்தில் உள்ள கேப்டனின் இல்லத்திற்கும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ரம்பா மற்றும் கலா மாஸ்டர் தனது குடும்பத்தினருடன் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்று கேப்டனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் கேப்டனின் மனைவியும், தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.