Share via:
உலகப் பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுக்க ஏழை மக்களுக்கு உணவு
வழங்க வேண்டும் என்று அவரது தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்
விடுத்திருந்தார். இந்த நிலையில் தமிழகம் முழுக்க பிரியாணி விருந்து மெகா சக்சஸ் என்று
அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு
மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த்
தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்வில் ரசிகைகள் அதிக அளவு கலந்துகொண்டு சமையலில் உதவி
செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையொட்டு தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள், ‘’பசியை உணர்ந்தவரால்
மட்டுமே பிறர் வலியை உணரமுடியும்… ஒருத்தரும் பட்டினில் இருக்கக்கூடாது என்பது தலைவரின்
கருத்து. ஆகவே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய் அண்ணா அவர்களின் உத்தரவின்படி….
பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் அவர்களின் ஆலோசனை பெயரில்… உலக பட்டினி தினத்தை
முன்னிட்டு மக்களுக்கு சிக்கன் பிரியாணி உணவு பரிமாறப்பட்டுள்ளது. எல்லா ஊர்கலிலும்
சமபந்தி விருந்து நடைபெற்றுள்ளது. இப்படியொரு
விருந்து தமிழகத்தில் நடந்தது இல்லை எனும் அளவுக்கு ஒவ்வொரு ஊரிலும் பிரமாண்டமாக விழா
நடந்தது’’ என்று தெரிவித்துள்ளனர்.
அடுத்து விஜய் நடத்த இருக்கும் கல்வி உதவித் தொகை விழா இதைவிட
பிரமாண்டமாக இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள்.