News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடிகர் விஜய், தன்னோட மக்கள் இயக்க நிர்வாகிகள் எல்லாரும சேர்ந்து மிக்ஜாம் புயலால பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உடனடியா தேவையான உதவிகள் அனைத்தையும் செய்யணும்னு அன்பா கட்டளை போட்டு இருக்காரு. இதன் மூலமாக பொதுமக்களின்  அன்பை பெற்றால் எதிர்காலத்தில் அரசியல் என்ட்ரி கொடுக்க வசதியாக  இருக்கும்னு நினைத்து இப்போது  களத்தில்  இறங்கியுள்ளனர் விஜய் ரசிகர் மன்றத்தினர். 


கடந்த 2015ம் வருஷம் வந்த வர்தா புயலையே பீட் பண்ணிடுச்சு 2023ம் வருஷம் வந்த மிக்ஜாம் புயல். தாழ்வான பகுதிகள்ல மழைநீர் வெள்ளம்போல தேங்கி சென்னை நகரத்தையே மொத்தமா தீவு போல மாத்திடுச்சு. தொடர்ந்து பல மணி நேரமா மின்சாரம் தடை பட்டதால கொதிச்சுப்போன மக்கள் சாலையில இறங்கி மறியல் போராட்டம் பண்ணதோட, பேருந்துகளையும் மறிச்சு ஆர்ப்பாட்டம் பண்ணாங்க. நடிகர்கள் விஷ்ணுவிஷால், பாலிவுட் நடிகர் அமீர்கான்னு, நடிகை நமிதான்னு பல பிரபலங்களும் மழை வெள்ளத்துல சிக்கி மீட்புப்படையினரால பத்திரமா மீட்கப்பட்டது பெரிய அளவுல வைரலாச்சு.


ஆனா இந்த வைரல் செய்திகள பாக்க முடியாத அளவுக்கு சென்னை நகரத்துல மின்சாரம், தொலை தொடர்புன்னு  எல்லாமே துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் வெளி உலகத்துல என்ன நடக்குதுன்னு தெரியாத அளவுக்கு ஸ்தம்பிச்சுப் போய் நின்னாங்க. இது ஒரு பக்கம் இருக்க சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் மழைநீர் வடிகால் பணின்னு   கள ஆய்வு எல்லாம் செய்தாங்களே என்ன ஆச்சுன்னும், மழைநீர் வடிகால் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.4 ஆயிரம் கோடி நிதி என்ன ஆச்சுன்னும் கொதிச்சுப் போய் இருக்காங்க.


தாழ்வான பகுதிகள்ல இருக்கிற மக்கள் போட் மூலமா மீட்கப்பட்ட முகாம்கள்ல தங்கவைக்கப்பட்டு அவங்களுக்கு தேவையான சில அத்தியாவசிய தேவைகளை மாநகராட்சி 

ஊழியர்கள் செய்து கொடுத்தாலும் வீட்ட விட்டுட்டு அடுத்து என்ன ஆகுமோ ஏதாகுமோன்னு பொது மக்கள் தவிச்ச தவிப்பு அப்பப்பா. மேலும் குடிநீர், உணவு, பால்னு எதுவுமே கிடைக்காம வீட்டுக்குள்ளேயும், வீட்ட விட்டு வெளிய வர முடியாத அளவுக்கு சிலரும் ரொம்பவே கஷ்டப்பட்டதா பல இடங்கள்ல புலம்பல்கள கேட்க முடிஞ்சுது.


அந்த வகையில சென்னையில அதிகளவுல பாதிக்கப்பட்ட விருகம்பாக்கம் ஸ்ரீநகர், கோயம்பேடு, புழுதிவாதிக்கம், வேளச்சேரி, சிட்கோநகர் வில்லிவாக்கம், ஐயப்பன்தாங்கல், மணலி, மணலிபுதுநகர், சத்யாநகர், மேலும் வடசென்னையில பல பகுதிகள்ல மழைநீர் இன்னும் வடியாமதான் இருக்கு. மழைநீரோட சேர்த்து கழிவுநீரும், விஷ பூச்சி, பாம்புன்னு நீந்தி வந்து மக்கள நிலை குலைய வெச்சிருக்கு. மிக்ஜாம் புயல்ல பாதிக்கப்பட்ட வகையில தமிழக அரசு மத்திய அரசுக்கிட்ட நிதி ஒதுக்க சொல்லி கோரிக்கை வைச்சிருக்கிற அதே சமயம், மழைநீர் வடிகால் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆச்சுன்னு பொதுமக்கள் கேட்கிற கேள்வி ஞாயமாத்தான் இருக்கு. ஆனா இதுல என்ன ஒரு வேதனையா விஷயம்னா, இத விட ஒரு பெரிய பிரச்சினை வந்தா மக்கள் இந்த பிரச்சினைக்கு குரல் கொடுக்கிற நிறுத்திட்டு அடுத்த வேலைய பாக்க போயிடுவாங்க அப்படிங்குறதுதான்.


இந்தநிலையில நடிகர் விஜய், அரசியல் களத்துல குதிக்குறதுக்கான நல்ல சந்தர்ப்பத்த இந்த மிக்ஜாம் புயல் ஏற்படுத்திக் கொடுத்திருக்குன்னுதான் சொல்லணும். ஏற்கனவே பொதுத்தேர்வுல அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகள தொகுதி வாரியா அடையாளம் கண்டுபிடிச்சு அவங்களுக்கு ஒரு விழா நடத்தி உதவித் தொகை கொடுத்து மாணவர்கள கவர் பண்ணாரு விஜய். ஏன்னா எதிர்கால தலைமுறைகளும் அவங்கதான். வருங்கால வாக்காளர்களும் அவங்கதான்.


அதோட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் சரி தொண்டர்களும் சரி அவங்கவங்க ஏரியாவுல பல நல்ல விஷயங்கள செய்து மக்கள் மனசுல நல்ல இடம்பிடிச்சு, நடிகர் விஜய்யோட அரசியல் அறிவிப்புக்கு பிறகு அந்தந்த இடத்துல முக்கிய இடத்த பிடிக்கணும்னு காய் நகர்த்திக்கிட்டு இருக்காங்க.


எடுத்துக்காட்டா சொல்லணும்னா உலக பசி நாள், நடிகர் விஜய் பிறந்தநாள்னு பல குறிப்பிட்ட நாட்கள தேர்ந்தெடுத்து மக்களுக்கு உணவு வழங்குறது, நலத்திட்ட உதவிகள வழங்குறதுன்னு மக்கள் மத்தியில சர்வைவ் பண்ணிட்டே இருக்காங்க. மக்களையும் ஒரு மாற்றத்த  நோக்கி விஜய்  மக்கள் இயக்க நிர்வாகிகள் நகர்த்திக்கிட்டுதான் போறாங்க. அந்த வகையில ஒரு பெரிய டாஸ்க விஜய் மக்கள் இயக்கத்தோட கையில கொடுத்து இருக்கு இந்த மிக்ஜாம் புயல்.


இது குறித்து நடிகர் விஜய் தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல ஒரு பதிவு மூலமா மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஒரு அசைன்மெண்ட் கொடுத்திருக்காரு. அது என்னன்னா? சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்ல மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள், முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகள்இன்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூகவலைதளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.


இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கைகோர்ப்போம். துயர்துடைப்போம்னு அந்த போஸ்ட்ல அன்பு கட்டளையிட்டிருக்காரு.


அதாவது தமிழக அரசோட இணைந்து தன்னார்வலர்களா செயல்படுங்கன்னு சொல்லியிருக்காரு விஜய். இது விஜய்ய ஒரு நடிகரா ஏத்துக்கிட்ட ரசிகர்களுக்கும், ஒரு அப்கம்மிங் அரசியல்வாதியா ஏத்துக்க மக்களுக்கும் கிடைச்சிருக்கிற ஒரு பெரிய வாய்ப்புன்னுதான் சொல்லணும். இதனால, சொல்லாமலேயே செய்வோம். இப்ப சொல்லிட்டாருல்ல பாருங்க பட்டய கிளப்புறோம்னு களத்துல இறங்கியிருக்காங்க விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் தொண்டர்களும்.


இப்படி ஒரு பக்கம் இருக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொந்த கல்யாண மண்டபமெல்லாம் வெச்சிருக்காரு. ஆனா தன்னோட ரசிகர்களுக்கு இந்த மாதிரி எந்த வேண்டுகோளையும் முன்வைக்கலையேன்னும் எந்த நிதி உதவியும் செய்யலையேன்னு கேள்வி எழுப்புறாங்க விஜய் ரசிகர்கள். பொதுமக்கள இப்ப ரொம்ப இக்கட்டான சூழ்நிலையில இருக்காங்கன்னு  நடிகர் ரஜினிகாந்துக்கு தெரிஞ்சும் அவர் மவுனியா இருக்காரேன்னு நடிகர் விஜய்யோட ரசிகர்கள் மட்டுமல்ல ரஜினியை உன்னிப்பாக  கவனித்து வரும் பொது மக்களும் கேள்வி எழுப்பி இருக்காங்க. இந்த மாதிரி இன்னல்களிலே ரஜினி உதவி செய்யலனா வேற எப்போது உதவிகள் செய்வார் ? அவரை வாழ வைக்கும் தமிழக மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனா இது ? இந்நேரம் பெங்களூரு இப்படி தண்ணீரில் தத்தளித்து இருந்தா ஓடிப்போய் எவ்வளவு  உதவிகள் செய்திருப்பார் என்று எக்கச்சக்கமாக கேள்வி எழுப்புறாங்க. 

ஜெயிலர் சக்சஸ், தலைவர் 170, தலைவர் 171ன்னு தொடர்ந்து படங்கள்ல நடிச்சிட்டு இருக்கிற ரஜினிகாந்த், கொஞ்சம் அந்த படங்கள வெற்றிகரமா ஓட வைக்கிற மக்களையும் கொஞ்சமா நினைச்சி பாத்தா நல்லாதான் இருக்கும்னு ஒரு டாக்கும் போயிட்டு இருக்கு.

ஆக மொத்தம் இந்தப் புயல் பலரோட முகத்திரைகளையும் கிழித்துச் சென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link