News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடிகர் சூர்யா ‘கங்குவா’ படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய நிலையில் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகை இஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.  ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

 

சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் அமைந்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது திடீரென்று ரோப் கேமரா 10 அடி உயரத்தில் இருந்து சூர்யாவின் தோள்பட்டையில் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த நசரத்பேட்டை போலீசார் விரைந்து சென்று படப்பிடிப்பு தளத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

 

ஏற்கனவே இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link